ஆழில்லாத விமானம் மூலம் நமது உழைப்பு நிறுவனம் இலவசமாக இயற்கை மருந்துகளை விசுறியது….!(வீடியோ)

ஆழில்லாத விமனம் மூலம் பரந்தனில் நமது உழைப்பு நிறுவனம் இயற்கை மருந்துகளை விவசாயிகளுக்கு இலவசமாக விசுறியது. அண்மையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் நமது உழைப்பு நிறுவன பிரதிநிதிகள் நேரடியாக நின்று குறித்த இயற்கை மருந்துகளை விசுறும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். Read more »

இலங்கை முதல் உதவிச் சங்கம் ஸ்தாபகர், அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல்…!

இலங்கை முதல் உதவிச் சங்கம், மற்றும்  இந்து சமயத் தொண்டர் சபை ஸ்தாபகரும், பிரதம ஆணையாளருமாகிய அமரர் தம்பு நாகேந்திரம் போஜன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கிளி/பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் இலங்கை முதல் உதவிச் சங்கம் இந்து சமயத் தொண்டர் சபை தலைமைச் செயலகத்தினால்... Read more »

வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளோருக்கு!! வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியுள்ள வாய்ப்பு.. |

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால் வெளிநாட்டு வேலை தேடுபவர்களுக்காக மெய்நிகர் தொழில் கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று 15 காலை 10.00 மணி முதல் ‘சூம்’ மூலம் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்படும். ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் ஜசூம் இணைப்பின் மூலம் ஒன்லைன் வேலை... Read more »

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள், ஜனாதிபதி முன்னிலையில் சம்மந்தன் காரசாரம்… |

காணாமல் ஆக்கப்பட்டவர்களை கொன்றுவிட்டீர்கள் என்பது எங்களுக்கு தொியும். ஆனால் என்ன நடந்தது என்பதை கண்டறிந்து பொறுப்புக்கூறல் நிச்சயம் நிறைவேற்றப்படவேண்டும். என தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் கூறியுள்ளார். இனப்பிரச்சினை தீர்விற்காக ஜனாதிபதி அழைத்த சர்வகட்சி கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி... Read more »

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும்.பொது வைத்திய நிபுணர் சிவன் சுதன்

பனை மரங்கள் அபிவிருத்தி அடைந்த வல்லரசு நாடுகளிலே செழித்து வளரக் கூடியனவாக இருந்திருந்தால் பனம்பழங்கள் ஒவ்வொன்றும் ஈய உறைகளிலே சுற்றப்பட்டு அதன்மேல் ஸ்ரிக்கர்ஒட்டப்பட்டு பாரிய விளம்பரங்களுடன் இங்கு இறக்குமதியாகி வந்திருக்கும். இலகுவில் ஏமாறக்கூடிய மனம்படைத்த நாமும் பணத்தை வாரி இறைத்து அவற்றை வாங்கி உண்டிருப்போம்.... Read more »

பேருந்திற்காக நின்றவர்களை மோதித் தள்ளிய பாரவூர்தி!

கண்டி – மஹியங்கனை வீதியில் பயணித்த பாரவூர்தியொன்று, பேருந்துத் தரிப்பிடத்தில் நின்ற பொதுமக்கள் மீது மோதியதில் 10 பேர் காயமடைந்த நிலையில், தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாரதிக்கு நித்திரைக் கலக்கம் ஏற்பட்டதால், பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டை இழந்ததாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில்... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம்….!

யாழ்ப்பாணம்  வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் இரத்த தான முகாம் இன்று  இடம் பெற்றுள்ளது.. யாழ் கட்டைக்காடு சென்மேரிஸ் விளையாட்டு கழகம் மற்றும் புனித கப்பலேந்தி மாதா ஆலய இளையோர் ஒருங்கிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடத்தியுள்ளனர். அருட்தந்தை அமல்ராஜ் அடிகளார் தலைமையில் கட்டைக்காடு... Read more »

பளையில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் அவசர சிகிச்சை பிரிவில்!

பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட வண்ணாங்கேணி பகுதியில் நேற்று (10) அன்று மாலை வீதியால் சென்றுகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீது கத்திக்குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. பளை வண்ணாங்கேணி கிராமத்தில் நேற்றைய தினம் மாலை வேளை அதே கிராமத்தைச்சேர்ந்த இளைஞர் ஒருவர் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த வேளை பின்னால் வந்த குடும்பஸ்தர்... Read more »

மின்விநியோக தடை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்

நாட்டில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதற்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக, மின்சார சபை ஒரு அலகுக்கு 56.90 ரூபாவை செலவிட வேண்டியிருக்கும். இலங்கை மின்சார சபையின் மதிப்பீடுகளின்படி இது... Read more »

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலும் இல்லம்.

வடமராட்சி தீருவில் மாவீரர் துயிலுமில்லத்தில் பல நூற்றுக்கணக்கான மாவீரர்கள் அவனுடைய பெற்றோர்கள் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு 6 மணிக்கு தீபம் ஏற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர் Read more »