மருதங்கேணி புதுக்காடு வீதியில் மருதங்கேணி பாலத்திற்கு அண்மித்த பகுதியில் இரவோடு இரவாக சிவலிங்கம் ஒன்று தோன்றியுள்ளது. இன்று காலை வீதியால் பயணித்த மக்கள் சிவலிங்கத்தை அவதானித்துள்ளனர். இந் நிலையில் பிரதேச மக்கள் சென்று வழிபாடுகளை ஆற்றி வருகின்றனர். Read more »
மின்கட்டண அதிகரிப்பு காரணமாக இன்று நள்ளிரவு முதல் உணவுப் பொதி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 10 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளதாக, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். இதேவேளை... Read more »
எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச வர்த்தகக் கண்காட்சியின் ஏற்பாட்டாளர்கள் யாழ் மாநகர சபைக்கு வழங்க வேண்டியுள்ள நிலுவையைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சர்வதேச வர்த்தகக் கண்காட்சியை நடாத்த... Read more »
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான முழு தொகையையும் கோரவில்லை, முற்பணத்தை மாத்திரமே கோருகிறோம். நிதியமைச்சு வெளியிடும் சுற்றறிக்கை, நிறுவன நிர்வாககோவை ஆகியவற்றுக்கு அமையவே செயற்பட முடியும். நிதி வழங்கினால் 20 அல்லது 25 நாட்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய முடியும் என... Read more »
தேர்தலை ஒத்திவைப்பதற்கு அரசாங்கத்துக்கு எந்த வகையிலும் இடமளிக்கக்கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பிலான நிலவரம் தொடர்பில் கேட்டறிந்துகொள்வதற்காக சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இன்று சென்றனர். சுதந்திர மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகளான ஜீ.எல்.பீரிஸ், டலஸ்... Read more »
நாடளாவிய ரீதியில் இம்மாதம் மூவாயிரத்திற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், 12 மாவட்டங்களில் டெங்கு அபாய நிலைமை காணப்படுவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம், கேகாலை, இரத்தினபுரி மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களும்... Read more »
இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு யாழ். இந்திய துணைத் தூதுவருக்கு கடிதம் இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதி மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்குமாறு கோரி, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களால் யாழ்.... Read more »
வடக்கு – கிழக்கில் ஊடக சுதந்திரத்தை பேண தொடர்ந்து குரல் கொடுக்கின்ற அதேவேளை கொல்லப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட எமது ஊடக நண்பர்களிற்கான சர்வதேச தலையீட்டின் கீழ் நீதி வழங்கப்படவேண்டுமென்பதில் நாம் சமரசம் செய்துகொள்ள தயாரா இல்லையென யாழ்.ஊடக அமையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு வருகை... Read more »
சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு ரூபா 776650.00 ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன. தற்போதைய மருத்துப் பொருட்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வைத்தியசாலையின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருந்துப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வைத்திய... Read more »
உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி முன்னெடுக்க தேர்தல் ஆணைக்குழுவிற்கு சற்றுமுன் உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ.எம்.ஆர்.விஜேசுந்தரவினால் உள்ளூராட்சி மன்றத்... Read more »