பருத்தித்துறை கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது…. |

யாழ்.பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து இன்று மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தற்போது மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் நோக்கி கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாளை காலை... Read more »

யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்து வேலையாற்றுவதுடன் மக்களுக்கான. கொடுப்பனவை வழங்காமலிருக்கவும் தீர்மானம்…..!

யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கமும் நாளை முதல் வீட்டிலிருந்தே பணியில் ஈடுபடவுள்ளதாக யாழ் மாவட்ட சமுர்த்தி முகாமையாளர் சங்கம் இன்று அறிவித்துள்ளது. யாழ் மாவட்ட. செயலருக்கு அனுப்பிய கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட விபரங்கள் வருமாறு. எரிபொருள் நெருக்கடி காரணமாக பிரதேச... Read more »

யுத்தத்தை வென்று கொடுத்தவர்கள் தோற்றுப் போய்விட்டார்கள்.யுத்தத்தில் வெல்லப்பட்ட நாடு மக்களுக்கே சொந்தமில்லை….! அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.

கோட்டாபய வீட்டுக்கு போகவில்லை. ஆனால் அவரை வீட்டுக்கு போகக் கேட்டுப் போராடிய மக்கள்தான் தமது வீடுகளுக்குள் முடங்கும் ஒரு நிலை உருவாகி வருகிறது. எரிபொருள் பிரச்சினையால் நாடு ஏறக்குறைய சமூக முடக்கம் என்ற நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது.தெருக்களில் தனியார் வாகனங்களை பெருமளவுக்கு காணமுடியவில்லை.பொதுப்போக்குவரத்து வாகனங்கள்தான்... Read more »

தாயுடன் சேர்ந்து தந்தையை கொலை செய்த மகன்: பதுளையில் பயங்கரம்

தந்தை ஒருவர் மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியும் மகனும் சேர்ந்து மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்த கொடூர சம்பவம் பதுளையில் இடம்பெற்றுள்ளது. பதுளை – கஹட்டருப்ப பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான நபரே இவ்வாறு மண்வெட்டியால் தாக்கிக் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த... Read more »

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேர் கைது.

சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்படையினர் நேற்றிரவு (02)கைது செய்துள்ளனர். கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது... Read more »

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய நாளை முதல்  எதிர்வரும் 8ஆம் திகதி வரையில் அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி நிலைக்கு மத்தியில்... Read more »

கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 35 கொல்கலன்களில் எரிபொருள் மீட்பு – சந்தேக நபர் ஒருவரும் கைது.

கிளிநொச்சி கரடி போக்கு பகுதியில் 34 கொல்கலன்களில் எரிபொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த பகுதியில் உள்ள வீடு சுற்றிவளைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது. இதன்போது, குறித்த காணியிலிருந்து 33 கொள்கலனில் டீசலும், 1... Read more »

இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தமது இராஜதந்திர கடவுச்சீட்டுகளை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையுடன் இந்த ஆர்வம் எழுந்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை இராஜதந்திர கடவுச்சீட்டுகளை... Read more »

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிடாதீர்கள்! உலக நாடுகளுக்கு தலிபான் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளை தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள்  கடந்த ஆண்டு கைப்பற்றி தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளதுடன், பெண்களுக்கு எதிராக பல தடைகளை தொடர்ச்சியாக விதித்து ஆட்சியமைத்து வருகின்றனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் மக்கள்... Read more »

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக தமிழர் நியமனம்

பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக விக்ரம் துரைசாமி என்னும் தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பிரித்தானியாவுக்கான இந்திய தூதராக  கடின உழைப்பாளி என அழைக்கப்படும் இவர் பங்களாதேஷுக்கான இந்திய தூதராகவும் செயற்பட்டுள்ளார். 1992 இல் அரசு பணியில் இணைந்த இவர் உஸ்பெகிஸ்தான், தென்கொரியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகப்... Read more »