நுவரெலியா கல்வி வலயத்துக்குட்பட்ட கொட்டகலை – போகாவத்த பிரதேச பாடசாலையொன்றில் தரம் பத்தில் கல்வி பயிலும் மாணவியொருவர், அதிபரின் தாக்குதலுக்கு இலக்காகி காயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டப் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தவிடயம் தொடர்பில் பாடசாலையின் அதிபர் திம்புள்ள... Read more »
எரிபொருளின் விலையில் நாளைய தினம் மாற்றம் ஏற்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை... Read more »
வடமராட்சி கிழக்கு கேவில் பகுதி இளைஞர்களால் பசுமை வளர்ப்போம் தேசம் காப்போம்” எனும் தொனிப்பொருளில் நேற்று முன் தினமும், நேற்றும் 4000 பனை விதைகள் நாட்டப்பட்டுள்ளன. நேற்று முன் தினம் 2500 பனை விதைகளும் நேற்று 1500 பனை விதைகளுமாக மொத்தம் 4000 பனை... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலை விடுதிகளில் தங்கியுள்ள நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வருவோரிடம் தொலைபேசி திருட்டில் ஈடுபட்டுவந்த 21 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். விடுதிகளில் தங்கியுள்ளவர்களின் கையடக்க தொலைபேசிகள் தொடர்ந்து திருட்டு போயுள்ளன. அவை தொடர்பில் யாழ்.பொலிஸ் நிலையத்தில் சிலர் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின்... Read more »
நாட்டில் பாண் உட்பட சகல பேக்கரி உற்பத்திகளினதும் விலைகள் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி தொடக்கம் உயர்த்தப்படவேண்டும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். எட்டு சதவீதமாக இருந்த வட் வரி 15 சதவீதமாக அதிகரிக்கப்... Read more »
யாழ்.கோப்பாய் பகுதியில் கடந்த 21ம் திகதி மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த 21 வயது இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துள் கொண்டிருந்த மேற்படி இளைஞன் கோப்பாய் பகுதிக்கு அண்மையாக வீதியின்... Read more »
தியாகி திலீபனின் நினைவேந்தலை 2016ம் ஆண்டு நடத்தியவர்கள் நாங்கள், 2017ம் ஆண்டு எங்களுடன் சேர்ந்து நினைவேந்தலை நடத்த கேட்டது தமிழ் காங்கிரஸ், 2018ம் ஆண்டு யாழ்.மாநகரசபை செய்தது. பின்னர் இரு வருடங்கள் சீராக நடக்கவில்லை. பின்னர் எப்படி 6 வருடங்களாக தியாகி திலீபனின் நினைவேந்தலை... Read more »
விடுதலைப்புலிகளை பயங்கரவாத பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிய மனுவை விசாரணை செய்ய வேண்டும் என்று கோரி, வாடகை வாகன சாரதி ஒருவரால் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு தாக்கலை மலேசிய பிராந்திய நீதிமன்றம் ஒன்று இன்று (29.09.2022) தள்ளுப்படி செய்துள்ளது.... Read more »
கோவிட் தொற்று நோய் மாத்திரமின்றி உக்ரைன் யுத்தம் காரணமாக உருவாகியுள்ள உலக பொருளாதார ஸ்திரமின்மையின் மோசமான பிரதிபலன்களான உணவு, எரிபொருள் மற்றும் பசளை விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளமை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையை ஏற்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உலக அரசியல் நிலைமைகள் இந்த பொருளாதார... Read more »
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. உலக சிறுவர் தினம் எதிர்வரும் முதலாம் திகதி அனுஷ்டிக்கப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று புதன்கிழமை(28) மாலை நெல்லியடி பொலிசாரினால் இராஜகிராமம் முன்பள்ளியில் வைத்து சிறார்களிற்கு... Read more »