ஸ்தம்பிதமடைந்த பாடசாலை செயற்பாடுகள்

சம்பள அதிகரிப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக ஆசிரியர்கள், அதிபர்கள் முன்னெடுக்கும் சுகவீன விடுமுறைப்போராட்டத்தினால் நாடளாவிய ரீதியில் கல்வி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களின் வரவுகள்... Read more »

சாவகச்சேரி வைத்தியசாலையின் கடமைகளை பொறுப்பேற்றார் வைத்தியர் ரஜீவ்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் கடமைகளை வைத்தியர் ரஜீவ் அவர்கள் இன்றையதினம் பொறுப்பேற்றார். குறித்த வைத்தியசாலையின் அத்தியட்சகராக பணிபுரிந்த வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் வடக்கு சுகாதார துறையில் காணப்பட்ட பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் வடக்கு சுகாதார துறைக்குள் இருந்து அவருக்கு பாரிய எதிர்ப்பும், மக்களிடம்... Read more »

யாழில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் –

யாழ்ப்பாணம் தென்மராட்சி  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாக தீர்மானித்திருந்த நிலையில்... Read more »

பார்சிலோனா குடியிருப்பாளர்கள் போராட்டம்

வெகுஜன சுற்றுலா மற்றும் ஸ்பெயினின் அதிகம் பார்வையிடப்பட்ட நகரத்தில் அதன் விளைவைக் கண்டித்து ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் சனிக்கிழமையன்று பார்சிலோனாவில்   அணிவகுத்துச் சென்றனர். 1.6 மில்லியன் மக்கள் வசிக்கும் நகரத்தில் உள்ளூர் வர்த்தகம் மற்றும்  சுற்றுலாவின் பாதிப்புகளுடன், கடந்த பத்தாண்டுகளில் பார்சிலோனாவின் உயரும் வீட்டுச் செலவு,... Read more »

உயர்நீதிமன்றில் ஆஜராகும் இலங்கை சட்டத்தரணிகள்

பொதுமக்களின் ஜனநாயக அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையை மறுதலிக்கும் வகையில் ஜனாதிபதி தேர்தலை பிற்போடுவதை அனுமதிக்கவே முடியாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரட்ண தெரிவித்தார். அத்துடன், ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை உத்தரவு கோரி தாக்கல்... Read more »

இலங்கையர்களுக்கு இஸ்ரேல் தூதரகத்தின் அவசர எச்சரிக்கை

இஸ்ரேலின் வடபகுதியில் ஹெஸ்புல்லா அமைப்பின் தாக்குதல்கள் அதிகரிப்பது குறித்து அப்பகுதியில்  வசிக்கும் இலங்கையர்களிற்கு இஸ்ரேலிற்கான இலங்கை தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேலின் வடக்கு பிராந்தியத்தில் விவசாயம் மற்றும் பராமரிப்பு துறைகளில் வேலைகளில் சுமார் 2,000 இலங்கையர்கள் பணிபுரிவதாக தூதரகம் தெரிவித்துள்ளது. சிரேஷ்ட ஹிஸ்புல்லாஹ் இராணுவ... Read more »

யாழ். இளைஞன் கட்டுநாயக்கவில் அதிரடியாக கைது!

போலியான இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடாவுக்கு  செல்லவிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த  இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தை  சேர்ந்த 27 வயதுடை இளைஞர் ஒருவரே இவ்வாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

Titanic பட தயாரிப்பாளர் காலமானார்…!

டைட்டானிக், அவதார் படங்களின் தயாரிப்பாளரான ஜான் லாண்டவ் காலமானதாக சமூக வலைத்தளங்களில் தகவல் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஜான் லாண்டவ் சமீப காலங்களில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் திடீரென சிகிச்சை பலனின்றி ஜான் லாண்டவ் உயிரிழந்துள்ளார் அத்துடன்... Read more »

சட்டவிரோதமாக ஐரோப்பா செல்ல முயற்சித்த 89 பேர் பலி!

சட்டவிரோதமாக குடியேறியவர்களை ஏற்றிச் சென்ற படகு ஆப்ரிக்காவிற்கு சொந்தமான மொரிட்டானியா கடலில் மூழ்கியதில் 89 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழு கடந்த 1ஆம் திகதி ஐரோப்பா நோக்கி பயணித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. படகு மூழ்கியதையடுத்து, கடலில் மிதந்த 09 பேரை... Read more »

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். நீதிமன்ற உத்தரவுக்கமைய, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகக் கடமைகளைப் பொறுப்பேற்பதற்கு  கொழும்பு... Read more »