யாழில் ஆரம்பமான கண்டன ஆர்ப்பாட்டம் –

யாழ்ப்பாணம் தென்மராட்சி  சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்தை வலியுறுத்தியும், வைத்திய பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும் முன்னெடுக்கவுள்ள கடையடைப்புக்கான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

குறித்த கண்டன ஆர்ப்பாட்டமானது இன்று (08) காலை 8 மணியளவில் ஆரம்பமாக தீர்மானித்திருந்த நிலையில் சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்காக செயற்பட முனையும் புதிய வைத்திய அத்தியட்சகருக்கு ஏதிராக முன்னெடுக்கப்படும் சதிகளை உடைத்தெறியவும், வைத்தியசாலையின் பணிகளை உடன் வழமைக்கு திரும்ப வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கடையடைப்புக்கும் சாவகச்சேரி பொது அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரான அர்ச்சுனாவை இரவோடு இரவாக கைது செய்ய வந்த காவல்துறையினர் மக்களின் பாரிய எதிர்ப்பை அடுத்து அவரை கைது செய்யாமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews