மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 9 ஏ பெறுபேற்றை பெற்ற பாடசாலை மாணவன்! வெளியான காரணம்

அம்பிட்டிய பிரதேசத்தில் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஒன்பது “ஏ” பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த மாணவர் ஒருவரை நபரொருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திய சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது. பாதிக்கப்பட்ட மாணவர் பலத்த தீக்காயங்களுக்குள்ளான நிலையில் கவலைக்கிடமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,மாணவனின் உடலுக்கு தீ... Read more »

போதை கலந்த இனிப்புகள் பெருமளவில் மீட்பு – மாணவர்கள் இலக்கு

போதைப்பொருள் அடங்கிய 40,000 இனிப்பு வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இவை சிறுவர்களுக்கு விற்க தயாராக வைத்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாணந்துறையில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றிற்கு முன்பாக உள்ள கடையொன்றில்... Read more »

சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா ஏற்றுக் கொள்ளாது– பெடரல் பொலீஸ் றோபர் வில்சன்.

இலங்கையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு சட்டவிரோத குடியேற்ற வாசிகளை அவுஸ்ரோலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்பதுடன் பொலிசார் கடற்படையினர் கைது செய்து திருப்பி அனுப்பப்படும் எனவே  சட்டவிரோத ஆள்கடத்தல் காரரிடம் உங்கள் பணத்தையும் உயிரையும் பயணம் வைத்து பிரயாணிக்கவேண்டாம் என இலங்கை அவுஸ்ரேலியா துப்பறியும்... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் சட்டவிரோத சுருக்குவலை தொழில்…!

அண்மைக்காலமாக கட்டைக்காடு மீனவர்கள் கடல்வளத்தை அழித்துவருவதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்ட நிலையில் தொடர்ந்தும்  400 இற்கும் மேற்பட்ட படகுகள் சுருக்குவலை தொழிலுக்காக ஆழக்கடலுக்கு விரைந்து கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. நீரியல்வளத்துறையினரால் அடிக்கடி எச்சரிக்கப்பட்ட போதும் அப்பகுதி மீனவர்கள் குறித்த தொழிலை கைவிடாமல் தொடர்ந்து மேற்கொள்கின்றார்கள். இதனால்... Read more »

சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்.

சட்டவிரோத மணல் அகழ்வை  தடுத்து நிறுத்தி , மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவர் மணல் அகழ்வு கும்பலால்  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்... Read more »

எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு.

எள்சார் உற்பத்தி நிலையம் கிளிநொச்சி மாவட்டச் செயலர் திருமதி. ரூபாவதி கேதீஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு வே.தமிழ்ச்செல்வன் தலைமையில் நேற்று  (29.11.2022) இடம்பெற்றது. கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் IOM நிறுவனத்தின் நிதி அனுசரனையில் அமைக்கப்பட்ட எள்சார் உற்பத்தி... Read more »

செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் கிழக்கு மாகாணத்திற்கு ஆன்மீகச் செயற்றிட்ட  உதவிகள் –

அம்பாறை மாவட்டம்  –  பொத்துவில் பிரதேச செங்காமம் கிராமத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தின் கட்டிட பணிக்காக 3ம் கட்டமாக 50000 ரூபா நிதி ஆலய நிர்வாக சபையினரிடம் கையளிக்கப்பட்டதுடன்  பொத்துவில் பிரதேச றொட்டைக் கிராமத்தில் அமைந்துள்ள வீரையடி பிள்ளையார் ஆலய நிர்வாக சபையினரிடம்  பிள்ளையார்... Read more »

தடுத்து வைக்கப்பட்டுள்ள 6 பால் மா கொள்கலன்கள்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதன் காரணமாக, 153,375 கிலோகிராம் பால் மாவைக் கொண்ட ஆறு கொள்கலன்கள் இலங்கை சுங்கம் தடுத்து வைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (29.11.2022) உரையாற்றும் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.... Read more »

இந்திய நிதியுதவியின் கீழ் சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. இந்திய நிதியுதவியின் கீழ் அதிக விளைவுகளைக் கொண்ட சமூக அபிவிருத்திக் கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத்திட்டம் 2005ஆம்... Read more »

இ.போ.ச பணி புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!

இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்திற்குட்பட்ட ஏழு சாலைகள் ஒன்றிணைந்து மேற்கொண்டுள்ள பணி புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப் பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் காரணமாக வடக்கு மாகாணத்தில் இலங்கை போக்குவரத்து சபையில் பேருந்துகள் வழமை போல் சேவையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. Read more »