சட்டவிரோத மணல் அகழ்வாளர்களால் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல்.

சட்டவிரோத மணல் அகழ்வை  தடுத்து நிறுத்தி , மணல் கடத்த முயன்ற ஒருவரை பிடித்து விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைத்த இளைஞர் ஒருவர் மணல் அகழ்வு கும்பலால்  தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நேற்றைய தினம்  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் வலிக்கண்டி,  குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய  பவானந்தராசா தரிசியன் ஆவார்.
 இது குறித்து மேலும் தெரிய வருவதாவது நேற்று முன்தினம்  திங்கட்கிழமை(28) இரவு 9:00 மணியளவில்  வலிக்கண்டிப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வாகனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தது. ஒரு சுமை மணல் மண் சட்ட விரோத மணல் அகழ்வாளர்களால் அள்ளிச் சென்ற நிலையில் மீண்டும் மணல் அள்ளிச்செல்ல வந்த நிலையிலேயே கிராம இளைஞர்களால் வாகன உரிமையாளரை சிறப்பு  அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந் நிலையில் விசேட அதிரடி படையினரிடம் அழைத்துச் செல்லப்பட்ட குறித்த கப் ரக வாகன உரிமையாளர்  மற்றும் இளைஞர்கள்  நேற்று செவ்வாய்கிழமை (29) காலை 10 மணியளவில்  வலிக்கண்டிப் பகுதிக்கு சென்று  இளைஞர்  மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அஞ்சுறுத்தலும் விடுத்துள்ளார்.  காயமடைந்த இளைஞர் பருத்தித்துறை  ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews