வீடொன்றுக்குள் புகுந்து மர்மநபர்கள் அட்டகாசம் – குடும்ப உறுப்பினர்கள் மீது கொடூர தாக்குதல்

மாத்தறையில் வீடொன்றிற்குள் புகுந்த குழுவொன்று 13 வயதுடைய பாடசாலை மாணவன் உட்பட நால்வரை கத்தியால் குத்தி பலத்த காயங்களுக்குள்ளாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெங்கமுவ, புஹுல்ஹேனே, வலகட பிரதேசத்தில் உள்ள வீடோன்றில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. ஊர்பொக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு... Read more »

மஹர சிறைக் கைதிகள் 11 பேர் சுட்டுக் கொலை : குற்றத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்!

கொரோனா தொற்றுக்குள்ளான கைதிகளுக்கு உடனடியாக சிகிச்சை வழங்குமாறு கோரி மஹர சிறைச்சாலையில் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 11 கைதிகளைக் சுட்டுக் கொன்றது குற்றம் என வெலிசறை நீதிவான் துசித தம்மிக்க உடவவிதான தீர்மானித்தார். குற்றத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அனைவரையும்  கைது செய்து... Read more »

வெடுக்குநாறிமலையில், மீள விக்கிரகங்களை பிரதிஸ்டை செய்க- வவுனியா நீதிமன்று உத்தரவு.

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில், அழிக்கப்பட்ட விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்யவும், மீள் பிரதிஷ்டை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட வேளை பொலிஸாரால் எடுத்துச் செல்லப்பட்ட விக்கிரகங்களை ஆலய நிர்வாகத்தினரிடம் மீள வழங்கவும் வவுனியா நீதிமன்றம் இன்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது. வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்... Read more »

2012ற்கு பின்னர் இலங்கையில் அதிகரிக்கும் நில அதிர்வுகள்?

இலங்கையில் உணரப்பட்ட நில அதிர்வுகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 9 நில அதிர்வுகள் பதிவாகியுள்ளதாகவும் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில் 16 அதிர்வுகளும், 2021இல் 18 நில அதிர்வுகளும், 2022 இல் 5 அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாக... Read more »

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் :அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அவதானிப்பு

உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் சில சரத்துக்கள் அடிப்படை உரிமையை மீறும் வகையில் அமைந்துள்ளதை, அதனை ஆய்வு செய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு, அவதானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தக் குழுவின் அவதானிப்பின்படி, உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தின் 85 மற்றும் 86ம் பிரிவின்... Read more »

மொட்டுக் கட்சியை விட்டு வெளியேறுகிறாரா சரத் வீரசேகர…!

நாட்டைப் பிரிக்கும் நிலை ஏற்பட்டால் மாத்திரமே நான் மொட்டுக் கட்சியை விட்டுச் செல்வேன். அதுவரை இந்தக் கட்சியில்தான் இருப்பேன்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர்... Read more »

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம்: ஊடகத்துறையின் சுயாதீனத்தைப் பாதுகாக்க போராட்டத்திற்கு அழைப்பு.

அரசினால் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப்படும் ஊடகத்துறை மிக மோசமாக நசுக்கப்படும் என்ற அச்சம் காணப்படுகிறது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். எனவே குறித்த சட்டமூலத்திற்கு எதிராக குரல்... Read more »

சவேந்திரவுக்கு எதிராக விமல் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு: மறுக்கும் பாதுகாப்பு அமைச்சு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, பாதுகாப்புத் தலைமை அதிகாரி சவேந்திர சில்வாவுக்கு எதிராக சுமத்திய குற்றச்சாட்டை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. முன்னாள் இராணுவத் தளபதியுமான சவேந்திர சில்வா, அரகலய போராட்டத்தின்போது இடைக்கால நிர்வாகத்தை உருவாக்கும் சதித்திட்டத்திற்கு ஆதரவளித்ததாக... Read more »

அவுஸ்திரேலியாவில் கல்வி; இலங்கை மாணவர்களை ஏமாற்றும் ஆள்கடத்தல்காரர்கள்!

அவுஸ்திரேலியாவில் நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஆள்கடத்தல்காரர்கள் ஏமாற்றும் நடவடிக்கை குறித்து அவுஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு நிரந்தர விசாவை வழங்குவதாக தெரிவித்து இலங்கை மாணவர்களையும் குடும்பங்களையும் ஏமாறும் நடவடிக்கைகளில் ஆள்கடத்தல்காரர்கள் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்தள்ள அவுஸ்திரேலிய... Read more »

கிளிநொச்சியில் ஆளுநர் தலைமையில்  காணிகளின் பயன்பாடு தொடர்பில் கலந்து உரையாடல்…!

கிளிநொச்சியில் அரச காணிகள் மற்றும் பயன்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் கிளிநொச்சியில் அமைந்துள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில்  இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச காணிகளின் பயன்பாடு தொடர்பில்... Read more »