பொருளாதார வீழ்ச்சிக்கான காரணத்திற்கு தீர்வு இல்லாமல் வழங்கப்படும் IMF கடன் நாட்டை முன்னேற்றப் போவதில்லை – சபா குகதாஸ்

இலங்கைத்தீவு பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் கண்டு மீண்டெழ முடியாத நிலையில் சிக்கிய போது  சர்வதேச நாணய நிதியத்தின் முதற்கட்ட கடன் ரணில் அரசாங்கத்திற்கு கிடைத்தது ஆனால் பொருளாதார வீழ்ச்சிக்கு மிகப் பிரதான காரணமாக அமைந்த இனப்பிர்ச்சினைக்கு குறைந்த பச்ச தீர்வு நடவடிக்கைகளைக் கூட ரணில்... Read more »

பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் தீர்மானத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விசாரணைக்காக பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு... Read more »

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான துறைமுகம் மற்றும் விமான சேவை வரியை 10 சதவீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வரி அதிகரிப்பு இன்று முதல் அமுலுக்கு வரும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார். எவ்வாறாயினும், இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பால்... Read more »

ஊடகவிலாளரை அச்சுறுத்திய புலனாய்வு அதிகாரிக்கு பிடியாணை

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை அறிக்கையிடச் சென்ற முன்னணி தமிழ் ஊடகவியலாளர் ஒருவரை, அச்சுறுத்தி இடையூறு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், இலங்கை கடற்படையின் புலனாய்வு அதிகாரி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைக்கும் வகையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதவான் டி. பிரதீபன், நான்கு... Read more »

தியாகதீபம் அவர்களுடைய நினைவு நாளை தடை செய்யக்கோரி போலீசாரால் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு…..!

தியாக தீபம் திலீபன் அவர்களுடைய நினைவு நாள் நிகழ்வுகளை தடை செய்யக் கோரி  பருத்தித்துறை போலீசார் தாக்கல் செய்த மனுவை பருத்தித்துறை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. தியாக திலீபன் நினைவு நிகழ்வுகள் ஊர்திப் பாவனைகள் நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுவதாக குறிப்பிட்டு பருத்தித்துறை ... Read more »

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள்.படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள்….!

22.09.1995 அன்று வடமராட்சிகிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாள் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்றது. மாணவர் இனப்படுகொலையை இலங்கை விமானப்படையின் புக்காரவிமானங்கள் அரங்கேற்றியது. அன்றைய நாட்களில் வடமராட்சிகிழக்கில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள்... Read more »

ஜனாதிபதி – பொதுநலவாய செயலாளர் நாயகம் சந்திப்பு

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடருடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லாண்ட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்றது. இலங்கைக்கும் பொதுநலவாய செயலகத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் கடந்த வருடம் ருவண்டாவில் நடைபெற்ற... Read more »

திருகோணமலையில் திலீபனின் நினைவு ஊர்தி மீது தாக்குதல் – கைதான அறுவரும் பிணையில் விடுதலை

திருகோணமலை, சர்தாபுர பகுதியில் வைத்து திலீபனின் உருவச்சிலை தாங்கிவந்த நினைவு ஊர்தி மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் இன்று மாலை (21) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை உதவிப் பொலிஸ்மா அதிபரினால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் ஒரு இலட்சம் ரூபாய சரீர... Read more »

பிள்ளையான் கடத்தல் கொலைகள் மூலம் பெறப்பட்ட கோடிக்கணக்கான அத்தனை சொத்துக்களும் பறிமுதல் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவிப்பு

இராஜாங்க அமைச்சர் சி. சிவநேசதுரை சந்திரகாந்தன்; கொலைகள் கப்பமூலம் பெற்ற கோடிக்கணக்காக சொத்துக்கள் அத்தனையும் பறிமுதல் செய்யப்பட்டு இந்த மாவட்டத்திலே அவரால் பாதிக்கப்பட்டிருக்கின்ற அத்தனை குடும்பங்களுக்கும் கொடுக்கப்படவேண்டும் அதேவேளை சர்வதேச விசாரணை வேண்டும் என  தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம்... Read more »

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் இன்று காலை கிளிநொச்ச்சி சேவை சந்தை முன்பாக இடம்பெற்றது. இதன் போது தற்பொழுது ஜெனிவாவில் நடைபெற்று வரும் இலங்கை தொடர்பான விவாதத்தின் போது இறுதி யுத்தத்தின் போது  கையளிக்கப்பட்ட உறவுகள், வெள்ளைக்... Read more »