பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை பாராளுமன்ற குழுக்களில் இருந்து இடைநிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பாராளுமன்றத்தின் குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை தடுக்கும் தீர்மானத்திற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.இன்றைய பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சிகள் முன்வைத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் விசாரணைக்காக பாராளுமன்றத்தின் நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். மேலும் மேற்படி விசாரணை முடியும் வரை பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற குழுக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடாது என தீர்மானம் முன்மொழியப்பட்டுள்ளது.பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு தேவையான வரியை செலுத்தாமல் தங்க நகைகள் மற்றும் கையடக்க தொலைபேசியை கொண்டு வந்தமைக்காக அபராதம் விதிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews