கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ரஷ்ய கடற்படைக் கப்பல்..!!

ரஷ்ய கடற்படைக் கப்பல் வர்யாக் முறையான பயணமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில், கப்பலின் பணியாளர்கள், நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிடும் நோக்கில், இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.... Read more »

உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!

உணவக உணவுகளின் விலை  இன்று (02) நள்ளிரவு முதல்  அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள அச்சங்கத்தின்  தலைவர்  ஹர்ஷன ருக்ஷான்  மேற்படி தெரிவித்துள்ளார். இதன் போது மேலும் கருத்து... Read more »

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவருக்கும், வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் எச்.ஈ.கலிட் நாசர் சுலைமான் அல்அமீரி (H.E. Khaled NasserSulaiman AlAmeri), வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களை நேற்று சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (01.03.2024) மாலை இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு... Read more »

நள்ளிரவில் நடமாடும் மர்ம நபர்கள்…!

மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் ஒன்றிலும் பேருந்து தரிப்பிட வீதியிலுள்ள இரண்டு வர்த்தக நிலையங்களின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் சூறையாடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று(01)  நள்ளிரவில்  இடம்பெற்றுள்ளது. மேலும்,  இது குறித்து சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மஸ்கெலியா பொலிஸ்... Read more »

வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில்வான்மை விருத்தி தொடர்பாக கருத்தரங்கும்

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகளுக்கான சட்ட மாநாடும், தொழில் வான்மை விருத்தி தொடர்பான கருத்தரங்கும் இன்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் சிரேஸ்ட சட்டத்தரணி த.தவராசா தலைமையில் நடைபெற்றது. இவ் கருத்தரங்கு மாநாட்டுக்கு பிரதம அதிதியாக இலங்கை உயர்நீதிமன்ற நீதியரசர்... Read more »

நாகர்கோவில் மகாவித்தியாலய இல்ல மெய்வல்லுநர் போட்டி

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மகாவித்தியாலய வருடாந்திர இல்லமெய்வல்லுநர் திறனாய்வு போட்டி நேற்று வெள்ளிக்கிழமை 01.03.2024 பி.ப.01.45 மணியளவில் பாடசாலை மைதானத்தில் ஆரம்பமானது. பாடசாலை முதல்வர் கு.கண்ணதாசன் தலைமையில் ஆரம்பமான குறித்த நிகழ்வில் மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் சி.இராமச்சந்திரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு சிறப்பு... Read more »

வெடுக்குநாறி மலையில் மீண்டும் சிக்கல்…! சிவராத்திரி வழிபாட்டை குழப்ப சூழ்ச்சி…!

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்குமார்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தவபாலன் குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, எதிர்வரும்... Read more »

யாழ் பல்கலையில் பறக்கும் கருப்புக் கொடிகள்…!

சாந்தனின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ் பல்கலைக் கழக வளாகமெங்கும்  இன்றையதினம்(02) கறுப்பு கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட ஈழத்தமிழர் சாந்தன்,... Read more »

வெளிநாட்டு கடன்களை செலுத்தாவிட்டால் இலங்கைக்கு சிக்கல்…!

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். வீதி திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, அரசாங்கத்தை பராமரிப்பதற்கும்... Read more »

தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது…! அமைச்சர் டக்ளஸ்

இலங்கை நீதிமன்றங்களில் தமிழருக்கு நீதி கிடைக்காது என்பவர்கள் தமக்கு நீதி கிடைக்க நீதிமன்றங்களை நாடுவது வேடிக்கையானது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை அரசு தமிழருக்கு நீதியும் வழங்காது தீர்வும் தராது என்றவர்கள், இலங்கை... Read more »