வெளிநாட்டு கடன்களை செலுத்தாவிட்டால் இலங்கைக்கு சிக்கல்…!

வெளிநாட்டில் இருந்து பெற்ற கடன்களை உறுதி வழங்கியதன்படி செலுத்தாவிட்டால் இலங்கையை முன்னெடுத்துச் செல்லமுடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வீதி திட்டமொன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அரசாங்கத்தை பராமரிப்பதற்கும் போதிய வருமானம் தற்போது இல்லை.  கடந்த ஆண்டு முழுவதும் திறைசேரிக்கு மூன்று ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே கிடைத்ததாகவும்,  அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன்,  நாட்டில் வாங்கிய கடனுக்கான வட்டிக்கு இரண்டு ட்ரில்லியன்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளதாகவும், அதற்கேற்ப எஞ்சிய செலவுகளை கடனாகப் பெற்றுக் கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews