யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்கப்பட்டது! 30 பேருக்கு இதுவரை தொற்று உறுதி… |
யாழ்.கொடிகாமம் சந்தை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. கொடிகாமம் சந்தையில் இதுவரை எடுக்கப்பட்ட எழுமாற்று பரிசோதனையில் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தையை மறு அறிவித்தல் வெளியாகும்வரை முடக்குவதற்கு சுகாதார பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது. Read more »
அமைச்சரவையில் இன்று காலை புதிய மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. இதன்படி வெளிவிவகார அமைச்சராக ஜீ.எல்.பீரிஸ், கல்வி அமைச்சராக தினேஸ் குணவர்த்தன, சக்திவள அமைச்சராக காமினி லொக்குகெ, ஊடகத்துறை அமைச்சராக டளஸ் அழகப்பெரும, போக்குவரத்து அமைச்சராக பவித்திரா வன்னியாராச்சி சுகாதார அமைச்சராக ஹெகலிய ரம்புக்வெல ஆகியோர் நியமனம்... Read more »
யாழ்.போதனா வைத்தியசாலையில் 581 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையிலேயே 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்.மாவட்டத்தில் 70 பேருக்கு தொற்று. தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 26 பேர், வேலணை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 14 பேர், யாழ்.போதனா வைத்தியசாலையில்... Read more »
மொனராகலை மாவட்டம், புத்தள கட்டுகஹகல்கே வாவியிலிருந்து மூன்று மாணவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இம்முறை ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்த மாணவர்களே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மூவரும் மொனராகலை மஹனாம தேசிய பாடசாலையில்... Read more »
இலங்கையில் கொரோணாவால் மேலும் 161 மரணங்கள் நேற்று பதிவாகியுள்ளன. இதுவரை 6,096 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் ஒரே நாளில் அதிகூடிய மரணங்களில் – 83 ஆண்களும் 78 பெண்களும் உள்ளடங்குவதுடன் 60 வயதுக்கு மேற்பட்டோர் 122 பேர் ஆகும். Read more »
நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு சட்டம் நாளை முதல் முதல் மறு அறிவித்தல் வரை இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.குறித்த அறிவிப்பை இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த ஊரடங்கு உத்தரவானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு பாதிப்பை... Read more »
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்தினபுரத்தில் கிணற்றுக்குள் காணப்படும் சடலம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பின்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் பொலிஸார்... Read more »
இவ்வருட பாதீட்டில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகளிற்கு தீர்வு கட்டப்படும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளதாக புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் நடராஜா ரவிக்குமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து... Read more »
கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தமது வாழ்வாதாரமாக பல வருட காலமாக மண்பாண்ட உற்பத்தியினையே மேற்கொண்டு வருகின்றனர். அதனையே பிரதான வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்து வரும் நிலையில் மண்பாண்ட உற்பத்திகளை செய்ய முடியாத நிலையும், உரிய விலைக்கு ... Read more »
யாழ்.உரும்பிராய் பகுதியில் வீடொன்றின் மீது வன்முறை கும்பல் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். Read more »