மேலும் 167 கொரோணா மரணங்கள் பதிவு…!

ஒரே நாளில் அதிகூடிய மரணங்கள் பதிவு
– 103 ஆண்கள், 64 பெண்கள்
– 60 வயதுக்கு மேற்பட்டோர் 130 பேர்

இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 167 மரணங்கள் நேற்று (15) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 6,096 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 167 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 6,263 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு மரணமடைந்த 167 பேரில், 103 பேர் ஆண்கள், 64 பேர் பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews