ஆளும் கட்சி நாட்டை நடார்த்த முடியாத நிலையில், எதிர் கட்சியினாலும் நாட்டை நடார்த்த முடியாது. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது – கிளிநொச்சி விவசாயி ஆதங்க கருத்து……!

ஆளும் கட்சி நாட்டை நடார்த்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடார்த்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிப்பதுடன், நீண்ட... Read more »

பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட் காடுகள் தொடர்ச்சியாக கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி துணையுடன் சேர்ந்து அபகரிப்பு….!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட அரச காடுகள் தொடர்ச்சியாக  கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி ஆகியோரின்  துணையுடன் வெளியிடங்களைச் சேர்ந்த நபர்களால் சட்டவிரோதமாக துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் சர்வதேச மகளீர் தின நிகழ்வு…..!

வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. “பெண்தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள், சி190சமவாயத்தைஏற்படுத்துங்கள்” எனும் தொணிப்பொருளில் இவ்வருட பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது குறிதத் விடயத்தை விலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் கவனயீர்ப்பு ஊர்வலமாக பாரதி... Read more »

யாழில் மணப்பெண் அலங்காரக் கண்காட்சி……!

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதி செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான உடக சந்திப்பு யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விடுதியில் இடம்பெற்றது. திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண்... Read more »

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து – யுவதிகள் இருவர் படுகாயம்…..!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடும்ப தேவைக்கான பொருட்களுடன் இரண்டு துவிச்சக்கரவண்டியில் தனித்தனியாக பயணித்துக்கொண்டிருந்த யுவதிகள் மீது, பின்னால்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சல உணவகங்கள், வெதுப்பகங்கள் பூட்டு….!

தற்பொழுது  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு, கோதுமை மா என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15ற்கும் மேற்பட்ட உணவகங்களும் சில வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்கங்களில்... Read more »

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்து. ஒருவர் ஸ்தலத்தில் பலி…..!

கிளிநொச்சி இரணைமடு அம்பாள்நகர் பகுதியில் விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இரணைமடு வீதியில் அம்பாள்நகர் பகுதியில் மாலை  7.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இரணைமடு  பகுதியிலிருந்து  A9  வீதி நோக்கி பயணித்த ஐஸ்கிறீம் வியாபார ஊர்தியுடன் எதிரே பயணித்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.  விபத்தில்... Read more »

யாழ். மாவட்டத்தில் வெதுப்பங்களை மூடும் நிலை..!

யாழ்.மாவட்ட வெதுப்பகங்களுக்கு கோதுமை மா விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் வெதுப்பகங்களை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்கம் கூறியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில்,  வடக்கிற்கான பிறீமா மா விநியோகஸ்தருடன்... Read more »

நாளை பாடசாலைகள் ஆரம்பம்! பாடசாலைகளுக்கான புதிய சுகாதார நடைமுறை வெளியானது.. |

2022ம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை  ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் புதிய சுகாதார பாதுகாப்பு நடைமுறை வெளியாகியுள்ளது. 2021 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைகள் நிறைவடைந்ததையடுத்து, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை நாளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய பாடசாலை வாரம் ஆம்பமாகும் நிலையில்,... Read more »

அளவுக்கதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்ட 19வயது இளைஞன் பலி!

யாழ்.வலிகாமம் வடக்கு கட்டுவன் பகுதியில் அளவுக்கு அதிகமான போதை மாத்திரைகளை உட்கொண்ட 19 வயதான இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். நேற்று மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட நிலையில் நேற்றிரவு உயிரிழந்தார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் வியாபாரி... Read more »