எரிப்பொருள் கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்

மன்னார் – வங்காலை கிராம கடற்தொழிலாளர்களுக்கு உரிய முறையில் எரிபொருள் வழங்க கோரி ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் இன்று (18.10.2022) காலையளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை கிராமத்தில் 420 மீன்பிடி படகுகள் பயன்படுத்தப்பட்டு மீன்பிடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு... Read more »

பாடசாலைகளுக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோரின் விஷேட கவனத்திற்கு

கண்டி நகரில் பாடசாலை மாணவர்களிடம் பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் கும்பல் ஒன்று செயற்பட்டு வருவதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில், கண்டி பொலிஸ் தலைமையகத்தில் பெற்றோர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். இந்நிலையில், மற்றுமொரு பெற்றோர் குழுவினர் தமது பிள்ளைகளுக்கு சிரமம் என்ற அச்சத்தில்,... Read more »

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டத்தில் பலர் கைது

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்ததை தொடர்ந்து பொலிஸாரால் போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மாணவர்களின் போராட்டத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் சிலர் ஆதரவை வழங்கி,பொலிஸாருக்கு எதிராக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் சுமார் 19,000 இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பிற்காக காத்திருப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார். யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில்லா பிரச்சினைகளை விட... Read more »

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி..! வெளியான முக்கிய தகவல்

சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் 2022 நவம்பர் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார். தேசிய அடையாள அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டமையினால் மாணவர்கள் பிரச்சினைகளை... Read more »

யாழில் வர்த்தக நிலையங்களில் வைத்து போதை மாத்திரை விற்பனை: முதவல்வரின் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மருத்துவர் த.சத்திய மூர்த்தி, யாழ்.மாநகர முதல்வருக்கு நேற்று(17.10.2022) கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள புடவை விற்பனை நிலையங்களில் வைத்து போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவது தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்... Read more »

இலங்கையில் டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்! இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

இன்றைய தினத்திற்கான (17.10.2022) நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 360.40 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் அமெரிக்க டொலரொன்றின் விற்பனை பெறுமதியானது 370.93 ரூபாவாக காணப்படுகிறது. ஸ்ரேலிங் பவுண்டொன்றின் கொள்முதல் பெறுமதியானது 406.76 ரூபாவாக... Read more »

ரணிலின் அதிரடி அறிவிப்பால் கதிகலங்கியுள்ள நாமல்

மக்களால் விரட்டப்பட்ட ராஜபக்சர்கள் மீண்டும் தமது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ள கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த ஆட்சியின் வன்முறையை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்ட பலர் அதற்கான அழுத்தங்களை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுத்து வருகின்றனர். அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சு பதவிகளை... Read more »

வடமராட்சியில் வெட்டுக்காயங்களுடன் ஒருவர் பொலிசாரால் மீட்பு…!

யாழ்.வடமராட்சி – வல்லிபுரக் குறிச்சி பகுதியில் வெட்டுக் காயங்களுடன் நபர் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் கடந்த  ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்றுள்ளது. கடுமையான வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவர் காணப்படுவதாக. பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த... Read more »

திக்கம் வடிசாலையை தனியாருக்கு அனுமதிக்க முடியாது…!உற்பத்தியாளர்கள்,  இறுதித் தீர்மானம் கொழும்பில் அமைச்சர் டக்ளஸ்….! 

திக்கம் வடிசாலையை  ஒருபோதும் தனியார் மயப்படுத்த அனுமதிக்க முடியாது என்றும் பழுதடைந்த உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை புதிதாக கொள்வனவு செய்ய முழுமையான பணத்தினை  தாம்  வழங்குவதாகவும் பனைசார் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். அண்மையில் திக்கம் வடிசாலையை தனியாருக்கு வழங்குவது தொடர்பில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தில் இடம்... Read more »