ஆபத்தான மற்றும் சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம்! 19 வயது இளைஞன் பரிதாப பலி… |

சட்டவிரோதமான மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயதில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 வயதான இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் பொகுந்தர என்ற இடத்தில் நேற்றய தினம் மாலை இடம்பெற்றுள்ளது. பொதுமக்கள் பாவனையில் உள்ள வீதியில் நடத்தப்பட்ட இந்த போட்டியின்... Read more »

மின்வெட்டு நேரத்தில் தையல் கடைக்குள் புகுந்து வாள்வெட்டு! பருத்தித்துறை நகரில் ரவுடிகள் அட்டகாசம்.. |

யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த ரவுடிகள் கடையை அடித்து நொருக்கியதுடன், உடை உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளது. சம்பவத்தில் கடை உரிமையாளர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு மின்வெட்டு அமுலில் இருந்த சமயம் இடம்பெற்றுள்ளது.... Read more »

Dornier விமானம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட Dornier 228 விமானம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரினால் குறித்த விமானம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more »

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு தீர்க்க வேண்டும்- இராதாகிருஷ்ணன் எம்.பி

திருக்கோணேஸ்வர ஆலய திருப்பணி வேலைகளுக்கு ஏற்பட்டுள்ள தடையை ஜனாதிபதி தலையிட்டு உடனடியாக தீர்த்து வைக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலய திருப்பனி வேலைகளுக்கு தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களம் ஏற்படுத்தியுள்ள தடைகளை தீர்த்து... Read more »

பழைய திருடர்களை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சிக்க வேண்டாம்- ஜே.சி.அலவத்துவல எம்.பி

பழைய திருடர்களை மீண்டும் ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்றே ஜனாதிபதியிடம் கோருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதி, மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் கரிசணையுடன் செயற்படுகின்றாரா என்பது... Read more »

9,200 லீற்றர் பெற்றோலுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது!

9,200 லீற்றர் பெற்றோலுடன் நான்கு சந்தேகநபர்கள் ஆனமடுவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். பவுசரில் இருந்து பெற்றோலை லொறியில் ஏற்றிச் செல்ல முற்பட்ட போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பெற்றோல் மண்ணெண்ணெய்க்கு பதிலாக... Read more »

கடல் உணவுகளை, ஒன் – லைன் மூலம் பெறுவதற்கான பொறிமுறை ஆரம்பம்!

பொது மக்கள், தமக்குத் தேவையான கடல் உணவுகளை, ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்துள்ளார். குறித்த சேவை, இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில், இன்று, சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து... Read more »

முறையான தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி!

முறையான தரம் வாய்ந்த உள்நாட்டு மதுபான போத்தல்களை அடையாளம் காணும் விசேட செயலியொன்று (APP) எதிர்வரும் இரு வாரங்களில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி தெரிவித்தார். குறித்த செயலி இதற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்படவிருந்ததாகவும், ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அது தாமதமாகியதாகவும்... Read more »

புலம்பெயர் உறவுகளிடம் அமைச்சர் வேண்டுகோள்!

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான  தடையை நீக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றி தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் இந்த தீர்மானத்தினை நல்லெண்ணச் சமிக்கையாக புலம் பெயர் உறவுகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், தற்போதைய ஜனாதிபதி... Read more »

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் : நளின் பண்டார

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதிகளவான சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால், ஊதியத்தைப் பெறாது கடமையாற்றுவதாக,... Read more »