காலிமுகத்திடல் போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

காலிமுகத்திடலில் உள்ள ‘கோட்டா கோகம’ போராட்டத்தளத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோருக்கு எதிரான வழக்கை 2023 ஜூலை 19ஆம் திகதியன்று மீள அழைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.... Read more »

வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! கடற்தொழிலாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு…!

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள பிபார்ஜோய் (Biparjoy) சூறாவளி மேலும் வலுவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூறாவளி வடக்கு திசை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே கடற்தொழிலாளர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் சுசந்த கஹவத்த அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் படகுகளை பாதுகாப்பான... Read more »

ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது…!கஜேந்திரகுமார்

ஒரு சர்வதேச விசாரணை பொறிமுறை மூலம் தான் தமிழர்களுக்கான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என்பது இன்றைய எனது கைது எடுத்துக்காட்டுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். மருதங்கேணி போலீசாரின்  கடமைகளுக்கு இடையூறு விழைத்ததாக தெரிவித்து கொழும்பில் நேற்று கைது செய்யப்பட்டு... Read more »

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்தக் கதியெனில் தமிழ் மக்களின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்! இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமையைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நாடாளுமன்றத்தில் மிகவும் வன்மையாகக் கண்டித்தார். சாணக்கியன் எம்.பி. சபையில் இன்று உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது:- நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் கைது... Read more »

இலங்கை உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் அதிகரிப்பு

கடந்த மே மாதத்தில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 26.2% அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, கடந்த மே மாதம் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் 3,483 மில்லியன் (3.5 பில்லியன்) அமெரிக்க டொலர்களாக பதிவானதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த... Read more »

ஏறாவூரில் பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட சிறைச்சாலையில் 60 வயதுடைய தாயாரை அவரது மகள் அடைத்துவைத்து சித்திரவரை

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 60 வயது முதியவரான பெண் ஒருவரை பிரத்தியோகமாக அமைக்கப்பட்ட அறை ஓன்றில் நீண்ட காலமாக அடைத்துவைத்து சித்திரவதை செய்யப்பட்டு வருகின்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏறாவூர் 3ம் பிரிவு ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின்... Read more »

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக பொலிஸாருக்கு 4 மணிநேர விசாரணை

மருதங்கேணியில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அந்தவகையில் இன்றையதினம் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைத்துக் கொள்ளப்பட்டு ஆரம்ப கட்ட... Read more »

கஜேந்திரகுமார் கைது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கண்டனம் –

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னமபலம் கைது செய்யப்பட்டமைக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, தமிழர்களுக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் தலைவர் என்ற அடிப்படையில் கஞேந்திரகுமார் கைது செய்யப்பட்டதை நான் கண்டிக்கின்றேன். மேலும், அவரை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுதலை… |

இன்று (07) காலை கொழும்பல் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மருதங்கேணி மற்றும் ஜெயபுரம் பொலிஸ் நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவினால் இன்று (07) காலை பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

கிளிநொச்சி செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்ப்பு…!

செல்வாநகர் புதுக்குளம் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குளத்தில் சடலம் காணப்படுவது தொடர்பில் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் சிறு குற்றப் பிரிவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  கிளிநொச்சிசெல்வாநகர் பகுதியை சேர்ந்த 53 வயதுடைய வெள்ளைக்கண்ணு குணசேகரம்... Read more »