பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய சென்றபோதுகுறித்த சந்தேகநபர் பொலிசாரை தாக்கி தப்பிச் செல்ல முற்பட்ட வேளை பொலிசார் குறித்த சந்தேகநபர் மீது காலுக்கு கீழாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more »
நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு நீதி கோரி, முல்லைத்தீவில் இன்று இளைஞர்களால் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கறுப்பு துணியால் வாயைக் கட்டி அமைதியாக கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது. தொடர்ந்து நீதி அமைச்சின் செயலாளருக்கான மகஜர், முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனிம் கையளிக்கப்பட்டது.... Read more »
உரும்பிராயில் வீடு உடைத்து பொருட்கள்திருடிய மூவர் கோப்பாய் பொலிசாரினால் கைது! ஏழு லட்சம் ரூபாய் பொருட்களும் மீட்பு.கோப்பாய் போலீஸ் பிரிவுக்குட்பட்ட உடும்பிராய் மூன்று கோவில் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டு உரிமையாளர் உறவினர்களின் வீட்டுக்கு மட்டக்களப்புக்கு சென்று நீண்ட நாளுக்கு பின் வருகை தந்து... Read more »
தவறான முடிவெடுத்து மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில், குறித்த மாணவன் நேற்று முன்தினம்... Read more »
தவறான பக்கத்தில் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் ஒருவர் நேற்றையதினம் (08) உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவத்தில் மன்னார் – பெரியகடை பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை சந்தியோகு (வயது 72) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் சாப்பாடு... Read more »
பெரகலை ஊடான ஹப்புத்தளை – வெல்லவாய வீதி வியாரகல பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளமையால், அந்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த மண்மேட்டை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகளை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை... Read more »
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.... Read more »
இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய தீர்வுகளை காண்பதற்காக அனைத்து தலைவர்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருப்பதாக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வேறுபாடுகளை முன் நிறுத்தி மோதல்களை ஏற்படுத்திக் கொண்டதால்... Read more »
இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என ஓட்டிசம் மற்றும் பேசும் திறன் குறைபாடு உள்ள சிறுவன் இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்திக் கடந்து சாதனை படைத்துள்ளார். சென்னையைச் சேர்ந்த பரத்... Read more »
நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது. கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை... Read more »