நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா மாயம் – குற்றத்தடுப்பு பிரிவு தீவிர விசாரணை…!

நீதிமன்ற பதுகாப்பறையிலிருந்த 120 கிலோ கஞ்சா பொதி மாயமான சம்பவத்தை அடுத்து விசேட குற்றத்தடுப்பு பிரிவு விசாரணைக்காக குதித்துள்ளது.

கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பாதுகாப்பறையில் வைக்கப்பட்ட 120 கிலோ கஞ்சா மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இவ்வாறு மாயமாகியுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், கொழும்பிலிருந்து விரைந்த விசேட குழு விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஊழியர்கள் மூவருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, களஞ்சியப் பகுதியிலிருந்து மதுபானங்கள் உள்ளிட்ட அழிக்கப்பட வேண்டிய பொருட்களும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

களஞ்சிய பொறுப்பில் இருந்த இருவர் கனடா செல்ல முற்பட்ட நிலையில் அவர்களிற்கான பயண தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், துப்பரவு பணியிலிருந்த பெண் ஒருவர் மத்திய கிழக்கு நாட்டுக்கு செல்ல முற்பட்ட நிலையில் அவருக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

புதிதாக பொறுப்பெடுத்த சான்றுப் பொருள் களஞ்சியத்திற்கு பொறுப்பான ஊழியர்கள் பூட்டு உடைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பதிவாளருக்கு வழங்கிய தகவலிற்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போதே சான்றுப் பொருட்கள் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews