பாடசாலையில் கற்றதை மீட்டு படித்தே சிறப்பு தேர்ச்சி பெற்று கொண்டேன்! பொஸ்கோ மாணவன் அஷ்சயன் தெரிவிப்பு!

பாடசாலையில் கற்கும் விடயங்களை வீட்டில் சென்று மீட்டு படித்தன் மூலமே சிறந்த சித்தி அடைய முடிந்ததென யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் 2021ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளியான 193 புள்ளிகளைப் பெற்ற மாணவன் சுதர்சன் அக்சஜன் தெரிவித்தார் . நேற்று... Read more »

யாழ் மாவட்ட செயலத்தை முற்றுகையிட்டு ஈபிடிபி ஆதரவாளர்கள் போராட்டத்தில்….!

யாழ் மாவட்ட செயலக அதிகாரிகளின் செயற்பாடுகளிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் குறித்த போராட்டத்தில் ஈபிடிபி கட்சியின் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் ஈபிடிபி... Read more »

எதிர்வரும் 25ஆம் திகதி கொழும்பில் ஐ.தே.க ஆர்ப்பாட்டம்…!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதம் 25ஆம் திகதி கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக முன்னாள் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை... Read more »

அரசியல்வாதிகளின் கதைகளை மக்கள் விரும்புவதில்லை- நீதி அமைச்சர் அலி சப்ரி…!

பாராளுமன்றம் என்பது தான் விரும்பாத இடம் என்றும் அங்கு கதைக்கும் விடயங்களை செவிமடுக்க முடியாத நிலைமையே காணப்படுவதாகவும் நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், அரசியல்வாதிகளின் கதைகளைக் கேட்பதற்கு மக்கள் விருப்பமற்ற நிலையிலேயே உள்ளனர். இன்று நாட்டை... Read more »

பஸ் கட்டணமும் உயர்ந்தது: ஆகக் குறைந்த பஸ் கட்டணம் 20 ரூபாய்!

எரிபொருள் விலை விலை அதிகரிப்பை தொடர்ந்து பஸ் கட்டணமும் உயர்ந்துள்ளது.  புதிய பஸ் கட்டண அதிகரிப்புக்கு அமைய 17 ரூபாயாகக் காணப்பட்ட ஆகக்குறைந்த பஸ் கட்டணம், 20 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இன்று இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. டீசல் நிவாரணத்தை... Read more »

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை….!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை மறுதினம் (16) நாட்டு மக்களுக்காக விசேட உரையாற்றவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இந்த விசேட உரையானது அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக ஒளிஃஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது. Read more »

நாடு பயங்கரமான நிலைமைக்கு சென்றுக்கொண்டு இருக்கின்றது- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி…!

நாடு தற்போது பயங்கரமான நிலைமைக்கு சென்றுக்கொண்டு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். கொழும்பில் இன்று (14) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். விசேடமாக நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளமை, அதேபோன்று மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் என்பவற்றுடன்... Read more »

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆர்ப்பாட்டம்…!

பல்கலைக்கழகங்களை உடனயாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இன்று அடையாள சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், ஒன்றியம் ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டது.... Read more »

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல….! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

ஜனாதிபதி அழைத்தவுடன் விழுந்தடித்துக்கொண்டு செல்வதற்கு இந்த விவகாரம் சம்பந்தனின் குடும்ப விவகாரம் அல்ல என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும் சமூக விஞ்ஞான ஆய்வுமைய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் இடம் பெறவுள்ள பேச்சுவார்த்தை தொடர்பாக இன்று... Read more »

இந்திய மீனவர்களுக்கும் ஏழு வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட ஒருவருட கால  சிறை…!கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளை….!

கிளிநொச்சி இரணைதீவு கடற்பரப்பில் கடந்த 27ம்  திகதி எல்லை தாண்டிய நிலையில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த 08 இந்திய மீனவர்களையும் அவர்களின் படகையும்  கைது செய்த கடற்படையினர் கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து குறித்த   இந்திய மீனவர்களும் கிளிநொச்சி மாவட்ட நீதவான்... Read more »