மற்றுமொரு விலை அதிகரிப்பு.

மீண்டும் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை சுமார் ரூ.85,000 வரை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 10ஆம் திகதி 254,500 ரூபாவாக இருந்த ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 339,500 ரூபாயாக உள்ளது. அதன்படி, முன்பு ரூ.1,040-க்கு விற்பனை செய்யப்பட்ட... Read more »

ஊரடங்கு சட்டத்தை மீறி கொழும்பில் வெடித்தது போராட்டம்! திணறும் படையினர்.

அரசாங்கம் விதித்த வார இறுதி ஊரடங்கு உத்தரவை மீறி 12க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெலும் பொகுண திரையரங்கிற்கு அருகாமையில் இருந்து கொழும்பு... Read more »

மாதிபொல பகுதியில் ஒருவர் சுட்டுக் கொலை.

கலேவெல-மாதிபொல பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த நபர் மாதிபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மாதிபொல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்  கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் ... Read more »

உக்ரைன் போர்க்களம்! ரஸ்ய போர்க்கப்பல்களை மூழ்கடிக்க, உக்ரைனுக்கு இங்கிலாந்து வழங்கும் ஏவுகணை!

ரஸ்யாவின் போர்க்கப்பல்களை மூழ்கடிக்க உக்ரைனுக்கு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை வழங்க இங்கிலாந்து அரசாங்கம் விரும்புகிறது, இதன் மூலம்; கடலில் இருந்து குண்டு வீச்சு நடத்தும் ரஸ்யாவின் அழுத்தத்தை குறைக்க முடியும் என்று இங்கிலாந்தின் சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது ரஸ்ய ஆக்கிரமிப்பு போருக்கு மேற்கு... Read more »

பகிரங்கமாக மன்னிப்பு கோரிய கோட்டாபயவின் பிரசார பாடலை எழுதிய பாடலாசிரியர்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரசார பாடலான வேலை செய்யும் எமது வீரன் என்ற பாடலை எழுதிய பாடலாசிரியர் பசன் லியனகே அனைத்து மக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். தனது சமூக வலைத்தள கணக்கில் பதிவு... Read more »

ஊடுருவப்பட்டது கோட்டாபயவின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இணைய ஊடுருவிகள் மூலம் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கம் ஊடுருவப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் கொழும்பு ஊடகத்திற்கு வழங்கிய... Read more »

எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் குழப்பம்…!

இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்க்கட்சி தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் சற்று குழப்பம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அமைதியாக முன்னெடுக்கபட்டுள்ள போராட்டத்திற்கு பொலிஸார் தடுப்பு வாயில் வைத்து தடுக்க முயற்சித்துள்ளனர். இதனால் அதனை ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை... Read more »

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு.

மாதிவெல பகுதியில்  உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதிக்கு உடனடியாக நடைமுறைக்கு  வரும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர்களின்  உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பிற்காக பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், வீட்டுத் தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புலனாய்வுக் குழுக்களும் உஷார் நிலையில்... Read more »

ஊடகவியலாளர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றுமாறு பணித்த யாழ்ப்பாண  பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர்! –

யாழ்ப்பாண ஊடகவியலாளர்களை கைது செய்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றுமாறு யாழ்ப்பாண  பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பணித்ததன் காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண அலுவலகத்திற்கு முன்னால் குழப்பம் ஏற்பட்டது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாகபொலிசார் குவிக்கப்பட்டு இன்றைய... Read more »

சமூக ஊடகங்களின் தடை நீக்கம் இதுவரை இல்லை?

இலங்கையில் சமூக ஊடகங்களின் முடக்கம், இன்று பிற்பகல் 3.30க்கு நீக்கப்படவுள்ளதாக தகவல் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் அறிவித்திருந்த நிலையிலும் இதுவரை அது நீக்கப்படவில்லை. இலங்கையில் அரசாங்கத்துக்கு எதிராக இன்று பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மாலை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன்,  இன்று... Read more »