தொல்புரம் பகுதியில் நூதனமான முறையில் தங்க சங்கிலி திருட்டு!

மிகவும் நூதனமான முறையில் இன்றைய தினம் வடக்கம்பரை தொல்புரம் பகுதியில் காலை 9.30 மணியளவில் வீட்டின் படலைக்கு அருகே இருந்த அம்மா ஒருவரிடம் மோட்டார் சைக்கிள் வந்த இருவர் பின் இருந்தவர் கையில் வாழை இலையும் வைத்து கொண்டு தாங்கள் எதோ கட்டு (... Read more »

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை.

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு இன்று (06) தொடக்கம் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, மீண்டும் ஏப்ரல் 18ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது. Read more »

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி- அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம்.

நாட்டில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 22 கரட் தங்கம் பவுண் ஒன்று, 175,000 ரூபாய்க்கு... Read more »

மக்களின் போராட்டங்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம்- வடிவேல் சுரேஷ; எம்.பி.

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (6) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தன்னிச்சையான... Read more »

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் இணைந்து போராட்டம்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். \ குறித்த போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதிவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம்... Read more »

சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை…! பொத்துவில் பொலிகண்டி பேரியக்கம்.

சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை என  பொத்துவில் தொடக்கம்  பொலிகண்டி வரை பேரியக்கம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் எனும் ஊடக  அறிக்கையிலேயே... Read more »

ஆர்ப்பாட்டங்கள்/ போராட்டங்கள் தொடர்பில் விசேட கண்காணிப்பு..! பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.

மிக அமைதியான முறையில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால் திட்டமிட்ட வன்செயல்களை துாண்டும் வகையில் செயற்படும் குழுக்கள் தொடர்பில் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியுள்ளார். விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,நாட்டில்... Read more »

டீசலுக்காக காத்திருந்தவருக்கு ஏற்பட்ட விபரீத மரணம்..!

யாழ்.புன்னாலைக் கட்டுவனில் டீசலிற்காக வரிசையில் நின்ற பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய இளம் குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது... Read more »

நாடாளுமன்ற நுழைவாயிலில் நள்ளிரவை தாண்டியும் நீடித்த போராட்டத்தால் பதற்றம்..!

இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் நேற்று காலை ஆரம்பமான போராட்டம்  நள்ளிரவையும்  தாண்டி நீடித்திருக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நேற்று காலை மக்களால் தொடங்கப்பட்ட குறித்த போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நீடித்துள்ள நிலையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். Read more »

சற்றுமுன்னர் அவசரகால சட்டம் நீக்கம்!

ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று... Read more »