டீசலுக்காக காத்திருந்தவருக்கு ஏற்பட்ட விபரீத மரணம்..!

யாழ்.புன்னாலைக் கட்டுவனில் டீசலிற்காக வரிசையில் நின்ற பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய இளம் குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் யாழ் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது 37) என்பவரே உயிரிழந்தார். உயிரிழந்தவர் வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார்.

எனினும் தூக்கத்தில் அவர் வயாவிளானில் இறங்கவில்லை. இந்நிலையில் மீண்டும் பேருந்து யாழ்.நகரம் நோக்கிப் பயணித்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளது.

அதனால் கீழே இறங்கிய பயணி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார். அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்தபோது பயணி மீது ஏறியுள்ளது.

பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பேருந்து சாரதி அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார். என்று கூறப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews