சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளமை தொடர்பில் பல அரசியல்வாதிகள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விடயம் தொடர்பில்... Read more »
இலங்கை எதிர்கொள்ளவுள்ள தேர்தல்களில் போட்டியிடவுள்ள அரசியல்வாதிகள் இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை காண வேண்டும். குறிப்பாக 13ஆவது திருத்தத்தையாவது உரிய முறையில் அமுல்படுத்த வேண்டும் என பேராசிரியர் அர்ஜூன பராக்கிரம தெரிவித்துள்ளார். மார்ச் 12 இயக்கத்தின் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அத்துடன், வடக்கு... Read more »
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான அரசியல் கூட்டணி எதிர்வரும் ஏப்ரல் 5ஆம் திகதி அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது. ஏற்கனவே, ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான பங்காளிக் கட்சியாக உள்ள தமிழ் முற்போக்குக் கூட்டணியுடன் சஜித் பிரேமதாஸ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தார். இதேபோல் ஸ்ரீலங்கா முஸ்லிம்... Read more »
இரும்பு திருடர்கள் செல்லலாம்.. ஊடகவியலாளர்கள் ஏன் செல்ல முடியாது..ஆளுநரிடம் கயேந்திரன் எம்பி கேள்வி.
வலி வடக்கு உயர் பாதுகாப்பு நிலையத்தில் இரும்புத் திருடர்கள் செல்லலாம் என்றால் ஏன் ஊடகவியலாளர்களை அனுமதிக்க முடியாது என வட மாகாண ஆளுநரை பார்த்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் கேள்வி எழுப்பினார். நேற்று வியாழக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலில்... Read more »
அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து இரண்டு கைதிகள் தப்பிச்சென்றுள்ளனர். இன்று (29) முற்பகல் அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் காமினி திசாயக்க தெரிவித்தார். சிறைச்சாலையின் உணவகத்தில் இருந்து இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். தப்பிச்சென்ற கைதிகளைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார். Read more »
அரச வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் பட்டதாரிகளின் வயது வரம்பை 38 ஆக அதிகரிக்க வேண்டுமென விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போது ஆட்சேர்ப்புக்கான வயது வரம்பு 35 ஆக உள்ளது என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது... Read more »
உள்ளூர் உற்பத்தியாளரைப் பாதுகாக்கவும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் புதிய வரி அறிமுகப்படுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டம் ருவன்வெல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அத்துடன், 2025ஆம் ஆண்டு... Read more »
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று(28)இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்... Read more »
பொதுஜன பெரமுண கட்சியை மீளக் கட்டியெழுப்பி, பலப்படுத்துவதில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீவிர முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. பொதுஜன பெரமுண கட்சியின் புதிய தேசிய அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார். அதனையடுத்து முன்னைய தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச... Read more »
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.ரத்நாயக்க உறுதிபட தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலை நடத்தவேண்டியுள்ளதால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதில் எவ்வித தாக்கமும் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரகாரம்... Read more »