கம்போடியாவில் சட்டவிரோத வேலைக்கு அமர்த்தப்பட்ட 250 இந்தியர்கள் மீட்பு

கம்போடியாவுக்கு வேலை தேடிச் சென்ற 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

இவர்கள் போலி வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் முகவர் மூலமாக கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட்டுள்ளதுடன் அவர்கள் சட்ட விரோத சைபர் குற்றச் செயல்களில் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இது குறித்து கம்போடியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கும், அங்கு மாட்டிக்கொண்ட இந்தியர்களிடமிருந்து தொடர்ந்து புகார்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதையடுத்து, கம்போடியாவில் உள்ள இந்தியர்களுக்கு, மோசடி கும்பல் குறித்த தகவல் வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் மூலம் பலமுறை வழங்கப்பட்ட நிலையில் கடந்த 3 மாதங்களில் 75 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கம்போடிய அதிகாரிகளுடன் இணைந்து போலி முகவர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews