ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்..!

ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே காணப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தில், இந்திய நாட்டின் மத்திய பகுதியில் வெப்ப அலை வீசக்கூடும். அந்த வெப்ப அலை அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு நாட்டின் மையப் பகுதியில் நீடிக்கலாம் என தெரிவித்தார்.

மேலும் அடுத்த நான்கைந்து நாட்களில் கேரளா, தமிழ்நாடு, கடலோர ஒடிசா மற்றும் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் காணப்படும் என தெரிவிக்கப்படுகின்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews