தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும்! சஜித் வலியுறுத்து

“சிறைச்சாலைகளில் தற்போது உள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க... Read more »

விமான பயணிகளுக்கு விசேட அறிவித்தல்!

எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி முதல் இலங்கைக்கு பிரவேசிக்கும் மற்றும் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்கள், வருகை மற்றும் புறப்பாடு அட்டையை இணையத்தளத்தில் பூர்த்திசெய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.immigration.gov.lk அல்லது eservices.immigration.gov.lk என்ற இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலம், புறப்படுவதற்கு... Read more »

2023ஆம் ஆண்டு இலங்கை மின்சார சபையின் 1,100 ஊழியர்கள் ஓய்வு!

இலங்கை மின்சார சபையில் பணியாற்றும் சுமார் 1,100 ஊழியர்கள் 2023ஆம் ஆண்டு ஓய்வுபெற உள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் புதிதாக ஆட்சேர்ப்பு இடம்பெறமாட்டாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், 2022 செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கான மின்சார சபை ஊழியர்களின்... Read more »

மட்டக்களப்பில் 2 வயது 8 மாத சித்தியின் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது அண்ணன் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 2 வயது 8 மாத பெண் குழந்தையான  சித்தியின் மகளுக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்களை காட்டி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த 19 வயது இளைஞனை எதிர்வரும் ஜனவரி 9 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு... Read more »

இலங்கைக்கு, அமெரிக்காவிடமிருந்து மேலும் ஒரு தொகுதி மருத்துவ உதவி

இலங்கைக்கு மேலும் ஒரு தொகுதி மருந்து மற்றும் மருத்துவ பொருட்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளதாக, அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ‘ஹார்ட் டூ ஹார்ட் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு இந்த மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளது. இதன் பெறுமதி 2.7... Read more »

போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளைஞன் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் தலைமறைவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் திணைக்களம் ஒன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றுபவர் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை காலை... Read more »

பொலிஸ் வாகனத்தில் மோதி இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மன்னார் தலைமன்னார் பிரதான வீதி, தாராபுரம் பகுதியில் இன்று (29) காலை 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பனங்கட்டுகொட்டு பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்தரான ஆனந்த் கன்பியூசியஸ் விஜய் (வயது 32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.... Read more »

படகு இயந்திரம் பழுதடைந்த தமிழக மீனவா்கள் நால்வர் வல்வெட்டித்துறை கரையில் தஞ்சம்!

படகு இயந்திரம் பழுதடைந்த நிலையில் தமிழகம் – நாகை மாவட்ட மீனவா்கள் 4 போ் யாழ்.வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடி கடற்கரையில் தஞ்சமடைந்த நிலையில் பொதுமக்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவா்களை மீளவும் தமிழகத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

பொலிஸாரின் விசேட அறிவிப்பு

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கமல் சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில்... Read more »

இலங்கையில் தங்கியிருந்த ரஷ்ய சுற்றுலாப்பயணி மரணம்

வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் சடலம் அறையின் கட்டிலில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என வெலிகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளது. வெலிகமை பொலிஸ் பிரிவில் காலி-மாத்தறை பழைய வீதியில்... Read more »