இளைஞர்களின் தேவையற்ற செயற்பாடுகளால் சமூகம் சிதைவடைகிறது – வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர்

இன்றைக்கு பல கிராமங்கள் தங்களது மேம்பாட்டில் சிதைந்து கொண்டு இருக்கின்றது. இளைஞர்கள் தேவையற்ற சமூக விரோத செயற்பாடுகளிலே ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என வலிகாமம் கல்வி வலயத்தின் பணிப்பாளர் திரு. ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் வள்ளியம்மை வித்தியசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பிரதம... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் பல்வேறு உதவிகள்…..!

மன்னார் மாவட்டம் –   மாந்தை மேற்கு பிரதேசத்தில் உள்ள  இலுப்பைக்கடவை கிராமத்தில் வசிக்கின்ற யுத்தத்தால் பாதிக்கப்பட்டு  விசேட தேவைக்குட்பட்டவரான  –  இடுப்புக்கு கிழே செயலிழந்தவருக்கு 25,000 ரூபா நிதியும், பால்மா, சத்துமா பைக்கற்றுக்கள்  என்பனவும் வழங்கப்பட்டுள்ளதுடன் மடு பிரதேசத்தில் உள்ள  பெரிய பண்டிவிரிச்சான் மேற்கு... Read more »

50 கிலோவுக்கும் மேற்பட்ட நிறையுடைய கஞ்சா மீட்பு…!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் – சவுக்கடி பகுதியில் இருந்து 50 கிலோ, 463 கிராம் எடையுடைய கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன. இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,  இந்த கஞ்சா பொதிகள் சவுக்கடி காட்டுப் பகுதியில் ஓலைகளால் மறைத்து வைக்கப்பட்ட... Read more »

டொலர்களை பதுக்கியவர்களுக்கு கிடைத்த பெரும் ஏமாற்றம்

மோசடியாளர்களின் கதைகளை நம்பி டொலர்களை பதுக்கி வைத்திருந்த மக்கள் இன்று சிரமத்திற்கு உட்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்த நாட்டுக்கு டொலர்களை அனுப்பக் கூடாது என்று சொல்லி கடந்த காலங்களில் அரசியல் கட்சிகள்தான் பெரிய அளவில் பிரச்சாரம் செய்தன. வெளிநாடுகளில் பணிபுரிவதாக நம்பப்படும்... Read more »

ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோவில் ஆகியவற்றை மீள கட்டுவதற்கு அனுமதியுங்கள்!

கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோயில் ஆகியவற்றின் நிலை என்ன? என அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கை சைவமக்களின் மிகத்... Read more »

பயணிகள் பேருந்தில் இளைஞன் மீது சரமாரி கத்திக்குத்து! ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்.. |

தனியார் பயணிகள் பேருந்தில் பயணிதத இளைஞன் ஒருவன் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் பிலியந்தலை பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. பிலியந்தலையில் இருந்து கஹபொல நோக்கி பயணித்த தனியார் பேருந்தில் பயணிகளின் பணப்பையொன்றை இருவர்... Read more »

காட்டில் தனிமையில் வாழ்ந்த முன்னாள் போராளி பாதுகாப்பாக மீட்கபு..!

மட்டக்களப்பு – தாந்தாமலைக் காட்டுப் பகுயில் தனிமையில் வாழ்ந்துவந்த முன்னாள் போராளி ஒருவர் நேற்று முன்தினம்  புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கடந்த 4 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா என்பவர் தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா... Read more »

நாடு தழுவிய பணிப் புறக்கணிப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள இலங்கை ஆசிரியர் சங்கம்..!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது. குறிப்பாக சம்பள பிரச்சினை, உயர்தர பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் உள்ளிட்டவை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம்,  இலங்கை ஆசிரியர்... Read more »

சாவகச்சோியில் வீடு உடைத்துக் கொள்ளை! இணுவிலில் பதுங்கியிருந்த 3 பேர் கைது, கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களும் மீட்பு.. |

யாழ்.சாவகச்சோி – கெருடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் யாழ்.இணுவில் பகுதியில் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  யாழ்.சாவகச்சேரி கெரடாவில் பகுதியில் வீடொன்றை உடைத்து அங்கிருந்த வீட்டுத் தளபாடப் பொருட்கள் கடந்த மாதம் களவாடப்பட்டிருந்தன. அதனை அடுத்து வீட்டு உரிமையாளரால்... Read more »

காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி ஜெயவனிதா கைது!

தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி காசிப்பிள்ளை ஜெயவனிதா நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா ஏ9 வீதியில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2210 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கோரி... Read more »