ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோவில் ஆகியவற்றை மீள கட்டுவதற்கு அனுமதியுங்கள்!

கீரிமலை ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோயில் ஆகியவற்றின் நிலை என்ன? என அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியிருக்கின்றார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை சைவமக்களின் மிகத் தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலை. இப்பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிச்சிவன் ஆதிச்சிவன் கோயில் அமைந்திருந்தது. அச்சிவன் கோயில் தற்போது இல்லை.

இல்லை என்று அங்கு போய் வந்த அன்பர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்கள். மேலும் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மா அவர்களின் சமாதி கோயில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி, கதிரைவேலன் கோயில் இவற்றைக் காணவில்லை என்ற செய்தி சைவமக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.

சுமார் 33ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு பேரதிர்ச்சியை தந்தது. இவ்விடயம் தொடர்பாக கௌரவ ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அழிக்கப்பட்ட கோயில்கள் கோயில்கள் இருந்த இடத்தை சைவமக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும். மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோயில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும்.

தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் தொடர்பாக உடன் குரல் கொடுக்க வேண்டும். வடக்கு மாகாண கௌரவ ஆளுனர் பொதுமக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் உடன் ஒழுங்கு செய்ய வேண்டும்

என்று வேண்டுகின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews