18 வயசுக்கு உட்பட்ட இரண்டு சிறுவர்கள் விபத்தில் படுகாயம்….!

18 வயசுக்கும் குறைந்த இரண்டு சிறுவர்கள் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளனர். குறித்த சம்பவம் பருத்தித்தித்துறை புற்றளை பகுதியில் இடம் பெற்றுள்ளது. வீட்டிலிருந்து வீதியில் மோட்டார் சைக்கிளை  செலுத்திக்கொண்டு சென்றநபோது அது வேக  கட்டுப்பாட்டை இழந்து மோதியதிலேயே குறித்த  விபத்து இடம் பெற்றிருக்கலாம் என்றும் காயமடைந்த... Read more »

இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும்

இணுவில் பொது நூலகம் மற்றும் சனசமூக நிலையத்தின் ஆண்டு நிறைவு விழாவும் பரிசில் வழங்கல் நிகழ்வும் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இணுவில் நூல்நிலைய கலாசார மண்டபத்தில், தலைவர் சிவலிங்கம் புரந்தரா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர் திரு... Read more »

முல்லைத்தீவில் சட்டவிரோத சிறுவர் இல்லம் – வலயக்கல்விப் பணிப்பாளர் உடைந்தையா?

முல்லைத்தீவு மாவட்டத்தில் புது குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள “நொக்ஸ் ” என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்தவ முன்பள்ளி, முல்லைத்தீவு வலையக்கல்விப் பணிமணையின் உரிய அனுமதிகள் இன்றிச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.  புதுக்குடியிருப்பு வற்றாப்பளை வீதியில் அமைந்துள்ள குறித்த முன்பள்ளியானது முன்பள்ளி என்ற போர்வையில் மதமாற்ற... Read more »

இந்தியா, அமெரிக்கா, பிருத்தானியா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்த சீனா – சபா குகதாஸ்…!

அண்மையில் வெளிநாட்டு இணையதள ஊடகங்களில் சீனாவின் உடைய இரகசிய திட்டம் ஒன்று இடம்பெறுவதான செய்தி வெளியாகியது. தற்போது உள்நாட்டு ஊடகங்களில் அது பேசு பொருளாக மாறி உள்ளதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அவரது இல்லத்தில்... Read more »

பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா கடற்படையினரால் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிகண்டி கடற்கரையில் 84 கிலோ கிராம் கேரளா கஞ்சா இன்றைய தினம் திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. இரகசிய தகவலின் பிரகாரம் அவ்விடத்திற்கு விரைந்த கடற்படையினர் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. Read more »

கடந்த காலத்தின் மூலம் இனத்தை முன்கொண்டுசெல்ல முடியாது!- தர்மலிங்கம் சித்தார்த்தன்

தமிழர்களின் பலம் ஒற்றுமையாக இருப்பதே என புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் மக்கள் சந்திப்பு யாழ் கொடிகாமத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடமாகாண சபை முன்னாள்... Read more »

சாதாரணதரப் பரீட்சை பிற்போடப்பட்டது!

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை ஒத்திவைக்கப்படவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக எதிர்வரும் மே 14 ஆம் திகதி 2022ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க... Read more »

பொலிஸார் மக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்

நாட்டில் கடந்த 5 நாட்களில் மாத்திரம் 25 பேர் வீதி விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 5 நாட்களில் 270 வீதி விபத்துக்கள்... Read more »

தேர்தல் தொடர்பில் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அரசாங்கத்திடம் நிதி இல்லாவிடின் கட்டம் கட்டமாக தேர்தல்களை நடத்த முன் வர வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவை தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று(09.04.2023)இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், உள்ளூராட்சி... Read more »

உதயன் பத்திரிகை நிறுவனத்திற்குள் கிறிஸ்தவ கும்பல் அடாவடி

யாழில் இயங்கும் பிராந்திய பத்திரிக்கை நிறுவனத்தினுள் கிறிஸ்தவ சபையை சேர்ந்த போதகர் தலைமையில் சிறுவர்கள் பெண்கள் உள்ளடங்கிய கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டனர். அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றினுள் கிறிஸ்தவ மத போதகரின் தலைமையிலான கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து வீட்டில்... Read more »