விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு!

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று பிடியாணை பிறப்பித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செயித் அல் ஹூசைன் இலங்கைக்கு... Read more »

மட்டு மயிலத்தமடு மேச்சல் தரையில் கன்று வயிற்றிலுள்ள பசுமாட்டை இறைச்சிக்காக அறுத்து செல்லப்பட்ட சம்பவம் காணி அபகரிப்பில் ஈடுபடுபவர்களால் கால்நடைகளுக்கு அச்சுறுத்தல்

மட்டக்களப்பு பொலன்னறுறை எல்லைபகுதியிலுள்ள மயிலத்தமடு மாதவனை கால்நடை மேச்சல் பகுயில் மகாவலி கால் நிலையத்துக்கு அருகில் கன்று வயிற்றிலுள்ள பசு மாடு ஒன்றை இறைச்சிக்காக வெட்டி அறுக்கப்பட்டுள்ளதாகவும் கல்நடைகளை தொடர்ந்தும் திட்டமிட்டு அறுத்துவருவதாக கால்நடையாளர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்ட கிரான் பிரதேச... Read more »

அதிவேக நெடுஞ்சாலைகளில் இ.போ.ச பேருந்துகளை நடத்துநர்கள் இன்றி இயக்க தீர்மானம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளை அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் நடத்துநர்களின்றி, எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இயக்குவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளின் பயணிகளுக்கு, பயணத்தின் ஆரம்பத்தில் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும். அண்மையில்... Read more »

ஐந்தாவது இளைஞர் பாராளுமன்றத்தின் மூன்றாவதுஅமர்வு

ஐந்தாவது இலங்கை இளைஞர் பாராளுமன்றத்தின் 3 ஆவது அமர்வு நேற்றும் இன்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கே.மகேசன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க,... Read more »

பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – ஆய்வாளர் நிலாந்தன்

அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று  வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின.இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன.முதலாவது,சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங் கூறக்கூடாது என்று. இரண்டாவது,அந்த... Read more »

இந்தியாவை நோக்கிய ஈழத்தமிழரது கோரிக்கைகளும்; இலங்கைத் தீவு பொறுத்து இந்திய அரசியலும்

புதுடில்லிக்கும் ஈழத்தமிழருக்கும் இடையிலான உறவு ஆரோக்கியமானதாக இல்லாதநிலை நீடிக்கிறதாகவே தெரிகிறது. சென்னை ஈழத்தமிழர் சார்ந்து தீர்மானங்களை எடுக்கும் போதெல்லாம் இந்தியா எடுப்பதாக கருத முடியாது. சென்னைக்கும் புதுடில்லிக்குமான உறவின் தன்மை பொறுத்து ஈழத்தமிழருக்கும் புதுடில்லிக்குமான உறவு அமையும். சென்னையின் ஆளும் தரப்பு எடுக்கும் முடிவுக்கும்... Read more »

அமெரிக்க – சீன இராணுவ மோதலுக்கான அடிப்படையை ஷங்ரி-லா உரையாடல் ஆரம்பித்துள்ளதா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

உலக அரசியலானது, 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து ஆசிய மீதே அதிக கவனத்தை பதித்துள்ளது. 19ஆம் நூற்றாண்டில் மிகமுக்கியமான அமெரிக்காவின் மூலோபாயவாதியான அல்பிரட் தயார் மாகனுடைய குறிப்புகளின் பிரகாரம் 21ஆம் நூற்றாண்டு ஆசிய நூற்றாண்டு என்பதினை உலக அரசியலின் போக்குகளும் உறுதி செய்கின்றது. குறிப்பாக ஜூன்... Read more »

அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை…! பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன்.(video)

அரசிற்குள்ளும், மொட்டுக் கட்சிக்குள்ளும் ஒரு குழப்பகரமான நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நிலவுவதை எம்மால் அவதானிக்க முடிகிறது. ஆகவே புதிய தேர்தல் ஒன்றின் மூலம் புதிய ஜனநாயகம் ஒன்றை உருவாக்க அரசு முன்வர வேண்டும் என பா.உ வேலுச்சாமி இராதாகிருஸ்ணன் இன்று... Read more »

நெல்லியடி பொலோஸரால் நகைகள் மீட்பு. பெண் ஒருவர் கைது.

இருண்டு பிள்ளைகளின் தாயாரான 24 வயதுடைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொன் கந்தையா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்றுமுன் தினம்(16) குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளது.  அருகில் இருந்த நட்பு ரீதியான குடும்பத்தினராலேயே குறித்த நகைகள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. நேற்று காலை வேலை... Read more »

மட்டு வாழைச்சேனையில் கோழிச் சண்டையில் ஈடுபட்ட 7 பேர் 6 சண்டை கோழியுடன் கைது

மட்டக்களப்பு வாழைச்சேனை  பொலிஸ் பிரிவிலுள்ள நாவலடி பிரதேசத்தில் பணத்துக்காக கோழிச் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேரை சனிக்கிழமை (17) மாலை கைது செய்துள்ளதாகவும் 6 சண்டை கோழிககள் மற்றும் பணம் என்பவற்றை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். பொலிசாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து... Read more »