மதமாற்றமும் ஒரு திட்டமிட்ட இனவழிப்பே எனும் கருப்பொருளில் உருத்திர சேனை அமைப்பால் நேற்று சனிக்கிழமை யாழ்.நகரப் பகுதியில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. பிரசுரத்தில் தமிழர் தாயகம் எங்கும் உள்ள சைவ மக்களை மதம் மாற்றி தமிழர் வாழ்வியலையும் பண்பாடுகளையும் வழிபாட்டு முறைகளையும் ஒழிப்பதன் மூலம் இந்த... Read more »
யாழ்.சண்டிலிப்பாய் பகுதியில் கனி என்றழைக்கப்படும் ரவுடி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மற்றொரு ரவுடி கும்பலை சேர்ந்த 5 ரவுடிகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 17ம் திகதி சண்டிலிப்பாய் தொட்டிலடி பகுதியில் கனி என்றழைக்கப்படும் ரவுடி மீது மற்றொரு ரவுடி கும்பல்... Read more »
நாடளாவிய ரீதியில் இன்று தொடக்கம் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைத்து விற்பனை செய்பவர்களை கண்டறியும் நோக்கில் இந்த சோதனைகள் இடம்பெறவுள்ளது. அதன்படி இன்று முதல் அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more »
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்ட பேரணி மீது கொழும்பு – கோட்டை, இலங்கை வங்கி வீதியில் வைத்தே கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு சைத்தியம் வீதி, ஜனாதிபதி மாவத்தை, இலங்கை வங்கி மாவத்தை,... Read more »
கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் நேற்றையதினம் 20.05.2022 குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து பரந்தன் நோக்கிப் பயணித்த கப்ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதியே விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், வாகனத்தில் பயணித்த இருவர் காயமடைத்த நிலையில் சிகிச்சைக்காக தருமபுரம்... Read more »
ஈழத்தில் இருந்து நாட்டில் நிலவிய யுத்தம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியா சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும் ஈழ உறவுகள் தம்மை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரி திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு... Read more »
இராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்டு தரக்கோரி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2018ம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாபட்டினம்,... Read more »
முள்ளிவாய்க்காலில் நடந்த இனப் படுகொலைகளுக்கு உண்மையைக் கண்டறிந்து நீதியை நிலைநாட்டியிருந்தால் ராஜபக்கக்கள் அறத்தின் வழி நடந்து ஒரு தர்மத்தின் வழியிலான ஒரு அரசியலை நடத்தி இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கண்டாவளை கொம்படி அம்மன் ஆலயத்தின் புகழ்பாடும் கொம்படியம்மன்... Read more »
ஜனநாயகத் தேர்தலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஒருவரை தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்ற உறுப்பினராக்குவது அரசியல் விரோத செயலாகும் என யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற அரச சார்பற்ற நிறுவனமான சொண்ட் நிறுவனம் ஏற்பாடு... Read more »
யாழ்.கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள காணியை இராணுவமுகாம் விஸ்தரிப்பிற்காக சுவீகரிப்பதற்கான அளவீடு செய்யும் முயற்சி நேற்றையதினம் தடுத்து நிறுத்தப்பட்டது. குறித்த காணியை அளவீடு செய்வதற்காக நில அளவைத் திணைக்களம், பிரதேச செயலக அதிகாரிகளோடு துயிலும் இல்லத்திற்கு வந்திருந்தனர். இதை அடுத்து குறித்த இடத்திற்கு... Read more »