பிள்ளையானை தொடர்ந்து சாணக்கியனும்…..! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் உள்ள மக்களை குழப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

பருத்தித்துறையில் சற்றுமுன் விபத்து , மருத்துவர் படுகாயம், யாழ் போதனா  வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்துசாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில்  சற்றுமுன் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் ஒருவர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்  மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் .சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, பருத்தித்துறை... Read more »

சந்நிதியான் ஆச்சிரமத்தால் முல்லைத்திவில் பல்வேறு உதவிகள்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தினரால்  முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட , கரடிப்புலவு, பழம்பாசி, மாமடு, தண்டுவான், 17ம் கட்டை   ஆகிய  கிராமசேவையாளர் பிரிவுகளில்  தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கு ரூபா 352,000 பெறுமதியான அத்தியவசியமான உணவுப் பொருட்களும், தண்டுவான் மகாவித்தியாலயத்தில் கல்விகற்க்கும்... Read more »

நெடுந்தீவுக்கு அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் நேற்றிரவு 23 இந்திய மீனவர்கள், நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்துச்... Read more »

நாட்டில் சுதந்திர தினம் கொண்டாடுகின்றார்கள். நாங்கள் கடலில் சுதந்திரமாக தொழில் செய்ய முடியவில்லை – எம்.வி.சுப்பிரமணியம்

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் அவர்களது ஊடகவியலாளர் சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இதன்போது, சுதந்திர தினம் நாட்டில் கொண்டாடப்படுகிறது. ஆனால் நாங்கள் சுதந்திரமாக கடலில் தொழில் செய்ய முடியவில்லை. சுதந்திர தினத்தில் கூட இந்திய இழுவைப்... Read more »

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் சுதந்திரதின நிகழ்வும் மரநடுகையும்

இன்று இலங்கையின் 76ஆவது சுதந்திரதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் அடிப்படையில் இன்று இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 76வது சுதந்திர தின நிகழ்வு வடமராட்சி கிழக்கு பிரதேசசெயலகத்தில் கொண்டாடப்பட்டது. காலை 8.27 மணிக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி அவர்களால் தேசிய கொடி... Read more »

கட்டைக்காட்டில் மரநடுகையும் சுதந்திரதின நிகழ்வும்

இலங்கையின் 76 ஆவது சுதந்திரதினம் கட்டைக்காடு முள்ளியான் கிராம அலுவலர் காரியாலயத்தில் இன்று கொண்டாடப்பட்டது. முள்ளியான் கிராம அலுவலர் கி.சுபகுமார் தலைமையில் காலை 08.30 மணிக்கு தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் முள்ளியான் கிராம அபிவிருத்தி சங்கங்கள்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.... Read more »

கட்டைக்காட்டு கடற்கரையில் இராணுவத்தினரின் செயல்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இராணுவத்தினரால் இன்று சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது. இராணுவத்தின் 552 ஆவது படைப்பிரிவால் முன்னெடுக்கப்பட்ட கசிரமதானபணியில் கிராம அலுவலர்,சென்மேரிஸ் கடற்றொழிலாளர் சங்கம்,சமுர்த்தி உத்தியோகத்தர்,பொதுமக்கள், என பலர் கலந்துகொண்டனர். இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை முன்னிட்டு வடமராட்சிகிழக்கு பகுதியில் இராணுவத்தினர் சிரமதான பணிகளை முன்னெடுத்துவருகின்றனர். Read more »

யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுதந்திர தின பேரணி!

இன்றையதினம் இலங்கையின் 76வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சுதந்திர தின பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இதில் யாழ்ப்பாணத்து மக்களும் வெளிமாவட்ட மக்களும் கலந்துகொண்டனர். இந்த பேரணியானது துரையப்பா விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் ஆரம்பமானது. இவ்வாறு ஆரம்பமான பேரணி வைத்தியசாலை வீதி... Read more »

சாவகச்சேரியில் கசிப்புடன் ஒருவர் கைது!

நேற்றையதினம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சரசாலை பகுதியில் 20 லீட்டர் கசிப்புடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில்... Read more »