பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு 

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள கௌரவ ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்கள்... Read more »

சாந்தனின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. இதனை தொடர்ந்து சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். சாந்தனின் உடல் கொழும்பில் உள்ள மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டு,  பின்னரே... Read more »

வடக்கு மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை: குற்றச்சாட்டை மறுக்கும் கடற்படை

வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலை கட்டுப்படுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில்லை என, வடபகுதி மீனவர்கள், கடற்படையினர் மீது தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டுகின்ற நிலையில், உள்ளூர் தமிழ்... Read more »

இந்திய-இலங்கை மீனவர் நெருக்கடி: இரு தரப்பிலும் எதிர்ப்பு வலுப்பது ஏன்?

இலங்கை சட்டங்களுக்கு உட்பட்டு வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே, எல்லை மீறிய இந்திய மீனவர்கள் மூவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பதை இந்திய மீனவர்களும் மற்றும் அரசியல் தலைவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தமிழ் மீனவர் சங்கத் தலைவர் வலியுறுத்தியுள்ளார். “இலங்கையிலுள்ள நீதிமன்றத்தினால் அரசியல் அமைப்பில் உள்ள... Read more »

செங்கடலில் எமது பொறுப்பு நிறைவேற்றப்படும்! ஜனாதிபதி ரணில்

இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு பாரிய நவீனமயப்படுத்தல் அவசியம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். யுத்தத்தில் அனுபவம் பெற்ற நாடு ஒதுங்கி நிற்க விரும்பவில்லை எனவும் செங்கடலில் எமது பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். வரலாற்றில் முதல் தடவையாக  சீனா துறைமுக... Read more »

மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க புங்குடுதீவு கலட்டி ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான மாசி மாத மஹா சங்கடஹர சதுர்த்தி உற்சவம் நேற்று பக்திபூர்வமாக இடம்பெற்றது. கருவறையில் வீற்றிருக்கும் ஶ்ரீவரசித்தி விநாயகருக்கும், ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று எம்பெருமான் உள்வீதியுடாக  வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள்... Read more »

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அதிபர் தெரிவு – பெற்றோர்கள் விடுத்துள்ள கோரிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் தெரிவு குறித்து நேற்றையதினம் பெற்றோர்கள் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளனர். அவ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2023.03.02 ஆம் திகதி தொடக்கம் எமது கல்லூரிக்கு பதில் அதிபராக நியமிக்கப்பட்ட திரு. சி. இந்திரகுமார் (SLEAS) அவர்கள் எமது பிள்ளைகளின்... Read more »

சட்டவிரோதமாக வேப்பமர குற்றிகளை ஏற்றிச் சென்றவர் கைது!

நேற்றிரவு, அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக 09 வேப்பமரக் குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவர் கைதடி பகுதியில் வைத்து சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அதிகாரி பொ.ப.ஜெயரூபன் தலைமையிலான குழுவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர், அவரை சாவகச்சேரி... Read more »

பயங்கரவாத தடை சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்திற்கு முரணானவை : வழக்கிலிருந்து சிவாஜி முற்றாக விடுதலை – கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

குறித்த வழக்கில் பயங்கரவாத தடைச் சட்ட ஒழுங்கு விதிகள் சட்டத்துக்கு முரணானவை என தெரிவித்த கொழும்பு மேல் நீதிமன்றம்  குற்றம் சாட்டப்பட்ட சிவாஜிலிங்கத்தை வழக்கிலிருந்து நேற்று  வியாழக்கிழமை முற்றாக விடுதலை செய்து  தீர்ப்பளித்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம்... Read more »

இந்தியாவில் இருந்து இலங்கை வந்து துவிச்சக்கர வண்டி பயணத்தில் கலந்துகொள்ளும் குழுவிற்கு துணை தூதுவர் வாழ்த்துக்கள்

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மூன்று பேர் கொண்ட சைக்கிள் ஓட்டும் ஆர்வலர்கள் குழுவினர் நேற்றையதினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். இவர்கள் ஏற்கனவே தமது துவிச்சக்கர வண்டி பயணத்தை ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் யாழ்ப்பாணம் வந்தடைந்தனர். அந்தவகையில் யாழ்ப்பாண இந்தியத் தூதுவர் ஸ்ரீ சாய்... Read more »