யாழில் கட்டிடம் அமைப்பதற்கு இன்றையதினம் கிடங்கு வெட்டிய போது கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ் நாவற்குழியில் அமைந்துள்ள திருவாசக அரண்மனையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய நிலத்தை தோண்டிய போது நிலத்தின் கீழ் கைக்குண்டு... Read more »
இலங்கை விமானப்படையின் 73வது வருட நிறைவை முன்னிட்டு “வான் சாகசம் – 2024” கண்காட்சி நிகழ்வுகள் யாழ்ப்பாணம் – முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளது. “நட்பின் சிறகுகள்” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை தொடக்கம் 10 ஆம் திகதிவரை காலை 10 மணி... Read more »
புதிதாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவராக கடமையேற்ற சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார் யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில் சந்தித்தார்.... Read more »
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு இன்று தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை இழந்த மக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி “நிலத்தை இழந்த மக்களின் குரல்” எனும் தலைப்பில் கவனயீர்ப்பு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார அபிவிருத்திக்கான... Read more »
ஈரநில தினம்-2024 யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஈரநில நாள் -2024 நிகழ்வு 29.02.2024 அன்று ஜே/அத்தியார் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வு யாழ்.மாவட்ட அலுவலகத்தின் சி.இ.ஏ பிரதிப் பணிப்பாளர் திரு.டி.சுபோஹரன் அவர்களின் வழிகாட்டுதலிலும் தலைமையிலும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி.ஏ.ஸ்ரீஷண்முகப்பிரியா, சுற்றாடல் உத்தியோகத்தர்கள்... Read more »
இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கோரி, வட மாகாண மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் பேரணியொன்றை நடத்தவுள்ளதாக அகில இலங்கை மீனவர் மக்கள் தொழிற்சங்க இணைப்பாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம்(04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.... Read more »
தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தில் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளுக்கு நேராக, 90° கோணத்தில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எதிர்வரும் நாட்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட்ட... Read more »
ராஜீவ் காந்தி கொலை வழக்கிற்கும் சாந்தன் தரப்பினருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என நீதிபதிகளில் ஒருவர் தீர்ப்பு வழங்கிய போதும் அது நிராகரிக்கப்பட்டதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். உயிரிழந்த சாந்தனின் இறுதி ஊர்வலத்தின் போது ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உயிர்நீத்த... Read more »
சாந்தனின் வித்துடல் தாங்கிய ஊர்திப்பவனி சற்றுமுன் வல்வெட்டித்துறையை சென்றடைந்ததுடன், அங்கிருந்து ஆலடி வீதியூடாக தமிழீழத் தேசியத் தலைவரின் பூர்வீக இல்லம் அமைந்திருந்த வளாகத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. குறித்த இடத்தில் மக்கள் உணர்வுபூர்வமாக தமது அஞ்சலியை செலுத்தி விருகின்றனர் இதேவேளை இறுதி ஊர்வலமானது பொலிகண்டி... Read more »
இந்திய மத்திய,மாநில அரசுகளின் நீதிக்கு புறம்பான செயலே சாந்தனின் மரணத்துக்கு மூலகாரணமாக அமைந்துள்ளதுடன் சாந்தனின் மரணத்திற்கு இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியவை பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வலியுறுத்தியுள்ளது. போராளி சாந்தனுக்கு புகழ் வணக்கம்... Read more »