யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு த.தே.ம.முன்னணி ஆதரவு!

பெப்ரவரி 4 ம் நாள்  யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கிளிநொச்சியில் நடத்தவுள்ள பேரணிக்கு  எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இன்று அந்த கட்சி வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,... Read more »

பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, செயற்பாட்டு திட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் தெரிவிப்பு!

எதிர்வரும் காலங்களில் பயிற்சி கருத்தரங்குகளை தவிர்த்து, இதுவரை வழங்கப்பட்ட பயிற்சிகளை கொண்டு செயற்றிட்டங்களை முன்னெடுக்குமாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். வடக்கு மாகாணத்தில் செயற்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற  தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணத்திலுள்ள... Read more »

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர்படுகாயம்

கட்டு துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ்  உத்தியோத்தர்  ஒருவர்படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 01.02.2024 இன்றைய தினம் தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குற்ப்பட்ட கோரமோட்டை பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி இடம் பெறுவதாக கிடைக்கப்பெற்ற... Read more »

வலி தென்மேற்கு பிரதேசசபை எல்லைக்குள் இருட்டில் மூழ்கும் கிராமங்கள்

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பண்டத்தரிப்பு வட்டாரத்தில் பல பிரதான வீதிகள் உள்ளக வீதிகள் மின்விளக்குகள் பழுதடைந்த நிலையில் இருளடைந்து காணப்படுகின்றன. இது தொடர்பில் பிரதேச சபை செயலாளரின் கவனத்திற்கு பொதுமக்கள் எழுத்துமூலமாகவும் நேரிடையாகவும் முறைப்பாடு செய்தும் திருத்த பணிகள் மந்தகதியிலேயே இருப்பதால்... Read more »

ஆதிமயிலிட்டி அருள்மிகு காசிப்பூதராயர் ஆலய கும்பாவிஷேகதின மணவாளக்கோல உற்சவம்.

ஆதிமயிலிட்டி.அருள்மிகு காசிப்பூதராயர் ஆலய மணவாளக் கோல உற்சவம் நேற்று (31) இடம்பெற்றது. காலை 8.30 மணிக்கு சங்காபிஷேகத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மூலமூர்த்திக்கு 1008 சங்காபிஷேகமும், பரிவார மூர்த்திகளுக்கும் அபிஷேகம் கிரியைகள் இடம்பெற்றது. இதேவேளை மாலை 6.00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் இடம்பெற்றது. காலை சங்காபிஷேகம்... Read more »

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டு பயண தடை

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நாளை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையையும் விதித்துள்ளார். கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யாமைக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது கைதான 10 பேரும்... Read more »

இலங்கை நோக்கி படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்

இலங்கைக்கு ஜனவரி மாதத்தில் வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 201,687 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் கடந்த 16... Read more »

யாழில் பெருமளவான போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நோக்குடன் உடைமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரினால் நேற்று புதன்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்.நகரை அண்மித்த பகுதியில் வைத்தே குறித்த நபரை கைது செய்ததாகவும்... Read more »

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனையவர்கள் பணிப்புறக்கணிப்பு – நோயாளர்கள் அவதி 

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை தாதியர்கள்,  சிற்றூளியர்கள் , பாமசியாளர்கள் , தொழிநுட்பவியலாளர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து இன்று 01.02.2024 (சுகயீன விடுமுறை) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்தி செய் , வாழ்வாதாரத்தினை அதிகரி போன்ற கோரிக்கைகளை... Read more »

இளைஞனின் காலை அடித்து முறித்த அச்சுவேலி பொலிஸார்

வீதியால் சென்ற இளைஞன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் வழி மறைத்த அச்சுவேலி பொலிசார் இளைஞனை தாக்கி மதிலுடன் எறிந்த நிலையில் இளைஞனின் கால் முறிந்து  யாழ்ப்பாணம்  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞன் வைத்தியசாலையில் தனது முறைப்பாட்டை பொலிசாருக்கு... Read more »