பொலிஸ் அதிகாரத்தை பறிக்கும் முயற்சிகளை ஈ.பி.டி.பி. எதிர்க்கும் – அமைச்சர் டக்ளஸ் 

மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரத்தினை இல்லாமல் செய்வதற்கு அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் தக்கவைக்கப்பட வேண்டும் என்பதுடன் மேலதிக அதிகாரங்களையும் பெற்றுகொள்ளும் வகையில் ஈ.பி.டி.பி.... Read more »

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி யாழ் ஆயருடன் சந்திப்பு

ஜேர்மன் நாட்டின் மிசறியோ நிறுவன இலங்கைக்கான பொறுப்பதிகாரி கொரினா பிறோக்மன் அவர்கள் கரித்தாஸ் கியூடெக் நிறுவன செயற்பாடுகளை கண்காணிக்கும் நோக்கில் யாழ். குடாநாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பு கடந்த 16ஆம்... Read more »

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா

மாதகல் புனித லூர்து அன்னை திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றோய் பேடினன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 17ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. 08ஆம் திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி நடைபெற்றுவந்த நிலையில் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.... Read more »

செம்பியன்பற்றில் லூர்த்து அன்னையின் திருவிழா

லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இலங்கையின் பல்வேறு ஆலயங்களில் முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று புனித பிலிப்புநேரியார் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள லூர்து கெபியில் புனித லூர்து அன்னைக்கு திருவிழா திருப்பலி இன்று17.02.2024 முன்னெடுக்கப்பட்டது. செம்பியன்பற்று பங்குத்தந்தை அருட்தந்தை டியூக் வின்சன் அவர்களின்... Read more »

மூன்றுவருடங்கள் சிறப்பான சேவையாற்றிய வைத்தியருக்கு அம்பனில் கெளரவம்

வடமராட்சி கிழக்கு அம்பன் பிரதேசவைத்தியசாலையின் வைத்தியர் Dr.கலாநிதி சந்திரன் மனோன்மணி அவர்களின் பிரிவுஉபசார விழாவும்,புதிய வைத்தியரை வரவேற்கும் நிகழ்வும்,மற்றும் இடமாற்றமாகி சென்ற ஊழியர் நலன்புரி சங்க ஊழியர்களை கெளரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம்17.02.2024 அம்பன் வைத்தியசாலையில் இடம்பெற்றது. மதியம் 12.00 ஆரம்பமான குறித்த நிகழ்வில்... Read more »

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி காலமானார்

இலங்கை கடற்படையின் ஏழாவது (07வது) தளபதி அட்மிரல் பசில் குணசேகர இன்று (17 பெப்ரவரி 2024) காலமானார். 1951 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி இலங்கை கடற்படையில் சேர்ந்தார். 1973 ஜூன் 01 முதல் 1979 மே 31 வரை இலங்கை... Read more »

சுமந்திரன் எம்.பி அதிரடி

அரசாங்கத்தின் இணையவழி பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து அதிபர் சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். சிறிலங்காவின் அரசியலமைப்பை மீறும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற சபாநாயகர் அனுமதியளித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறிலங்கா... Read more »

12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு  உட்படுத்திய 61 வயது கொத்தனார் உட்பட மூவர் கைது!

இலங்கை யின் மேல் மாகாணத்தின் மீகொட பிரதேசத்தில் 12 வயது சிறுமியை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் 61 வயதான கொத்தனார் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் சிறுமி மூன்று பேரால் பல சந்தர்ப்பங்களில் வன்புணர்வு... Read more »

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு

முல்லைத்தீவு விஸ்வநாதர்   ஆரம்பப் பாடசாலையின் 2023 ஆண்டு நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் துரித கணிதம் போட்டியில் சாதனை படைத்த மாணவர்கள் கெளரவிப்பு நிகழ்வு  பாடசாலை மண்டபத்தில்  நடைபெற்றது. இன்நிகழ்வில்  வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்,    கோட்டக்கல்வி பணிப்பாளர் சி. பாஸ்கரன்,... Read more »

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வு-ஜீவன் தொண்டமான்

மீனவர் பிரச்சினைக்கு விரைவில் நிலையானதொரு தீர்வை காணுமாறு இந்திய அரசிடமும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம் – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.   யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள... Read more »