தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRC) நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு..!

நேற்றைய தினம் (03) தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் தற்போதுள்ள தொலைத்தொடர்பு வரி 11.25% இல் இருந்து 15% ஆக அதிகரிக்கப்படும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப் பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக... Read more »

அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபரொருவர் கைது.

அனுமதிப் பத்திரமின்றி டீசல் வைத்திருந்த குற்றச்சாட்டில் புத்தளம் நகரசபை உறுப்பினர் மொஹான் துமிந்த பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் 215 லீற்றர் டீசலை அனுமதிப் பத்திரமின்றி வீட்டில் மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  புத்தளம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத்... Read more »

புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்: சுமந்திரன்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் தமிழ் மக்களின் நீண்டகால தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். செவ்வி ஒன்றிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். “அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என... Read more »

தண்ணீர் தொட்டியில் விழுந்து சிறுமி பரிதாபமாக பலி.

வவுனியா – பூவரசன்குளம் பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துவுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. வவுனியா – சுந்தரபுரம் பகுதியிலிருந்து தாய் ஒருவர் தனது பிள்ளையுடன் பூவரசன்குளம், நித்தியநகர் பகுதியில் உள்ள உறவினர் வீடு... Read more »

வீதிகளில் கூடாரங்களை அமைத்து ஆறு நாட்களாக எரிவாயுவுக்காக காத்திருக்கும் மக்கள்.

கொழும்பு- நாவல கொஸ்வத்த பிரதேசத்தில் வாழும் மக்கள் வீதிகளில் கூடாரங்களை அமைத்து தொடர்ந்து ஆறு நாட்களாக எரிவாயுவை பெற்றுத்தருமாறு கோரி கூடாரம் அமைத்து காத்திருக்கும் மக்கள் இப் பகுதியில் இன்றுடன் ஆறு நாட்களாக கூடாரங்களை அமைத்து மக்கள் எரிவாயுவுக்காகக் காத்திருப்பதாகவும் அவர்களுக்கு இதுவரை எரிவாயுக்கள் விநியோகிக்கப்படவில்லையெனவும் மக்கள்... Read more »

அபாய கட்டத்தில் பசில்! பாதுகாக்க முடியாத நிலையில் ரணில்.

தற்போதைய நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ராஜபக்சர்களை பாதுகாக்க நினைக்க மாட்டார், அவ்வாறு செய்தால் ராஜபக்சர்களுக்கு நிகழ்ந்ததே ரணிலுக்கும் நடக்கும் என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். தமிழ் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க... Read more »

இலங்கையை விட்டு வெளியேற மூன்று இலட்சம் பேருக்கு வழங்கப்படும் வாய்ப்பு.

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் 120,000 இற்கும் அதிகமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 100% அதிகரிப்பு என அதன் சர்வதேச விவகாரங்களுக்கான மேலதிக பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்தார்.... Read more »

மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இராணுவ வீரர்.

அனுராதபுரம் திரப்பனை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றின் ஆசிரியர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குள் 15 வயது மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் இராணுவ வீரரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 24 வயதான இராணுவ வீரரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக திரப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக... Read more »

கொழும்பில் முக்கிய வீதியை மறித்து மக்கள் போராட்டம்.

கொழும்பு கொம்பனி வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சமையல் எரிவாயுவை பெற்றுதருமாறு கோரியே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இப்பகுதியில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.     Read more »

1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய உத்தரவு.

அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக கொவிட் நிதியத்திலிருந்து 1.8 பில்லியன் ரூபாவை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். கொவிட் தொற்று தற்போது கட்டுக்குள் உள்ளதால், சுகாதாரத் தேவைகளுக்காக... Read more »