அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும்: கலால் திணைக்களம்

அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக நாட்டில் போராட்டங்கள் இடம்பெறும் நிலையில் இவ்... Read more »

கோட்டாபயவை உடன் கைது செய்ய வேண்டும்! சம்பிக்க பகிரங்க தகவல்.

இந்த வரலாற்று நாளில், இலங்கை வரலாற்றில் மிகவும் ஊழல் நிறைந்த, அடக்குமுறை ஆட்சியை முடிவிற்கு கொண்டுவந்த தேசப்பற்றுள்ள தாய்நாட்டின் மகன்கள் மற்றும் மகள்களுக்கு எங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும்,கோட்டாபயவை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை புதிய அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும்... Read more »

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியுள்ளதாக தகவல்

ஜனாதிபதி ஊடகப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுதேவ ஹெட்டியாராச்சி பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது. Read more »

கோட்டாபய ராஜபக்ச இலங்கையின் மிகப்பெரிய முட்டாள் – ஓமல்பே சோபித தேரர் சீற்றம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சநாட்டின் மிகப்பெரிய முட்டாளாக மாறியுள்ளதாக கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று அனுப்பி வைத்துள்ள விசேட அறிக்கையொன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். சிங்கள பௌத்த மக்கள்மாத்திரமன்றி வாக்களித்த 69 இலட்சம் மக்களும் தற்போதைய ஜனாதிபதியை முழுமையாக பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளார்கள்.... Read more »

மற்றுமொரு இராஜினாமா தொடர்பான அறிவிப்பு! பொதுஜன பெரமுனவை கைவிட்ட முக்கியஸ்தர்.

போக்குவரத்து மற்றும் ஏனைய அமைச்சுப் பதவிகளில் இருந்து தாம் விலகியுள்ளதாக  அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.  இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றினை அவர் இட்டுள்ளார். புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதே பெரும்பான்மையான மக்கள் மற்றும் மதத் தலைவர்களின் எதிர்பார்ப்பாக  இருப்பதால் தான் ... Read more »

அரசாங்க ஊடக நிறுவனங்களை தாக்கும் முயற்சியில் போராட்டக்காரர்கள்.

இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி ஊடக நிறுவனங்களை நோக்கி போராட்டக்காரர்கள் சென்று கொண்டிப்பதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.  அத்துடன் தற்போது  ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.   நாட்டில் இன்று மக்களினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது ஜனாதிபதி... Read more »

ரணிலின் இல்ல வளாகத்தில் அதிகரிக்கும் பதற்றம்! ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் இல்ல வளாகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.  குறித்த பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு 7ல் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார்... Read more »

ஜனாதிபதியை பதவி விலகுமாறு மொட்டு கட்சியின் 16 எம்பிக்கள் கடிதம்.

சிறீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஜனாதிபதியை உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போதைய சூழ்நிலை குறித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ள கட்சி தலைவர்களுக்கு... Read more »

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராஜித மீது போராட்டக்காரர்கள் தாக்குதல்!

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீது போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து அவர் பாதுகாவலர்களால் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டார். Read more »

நாட்டில் எரிவாயு, எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை: ஜனாதிபதி.

நாட்டில் எரிவாயு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பில், நேற்று மாலை, விசேட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எரிவாயு மற்றும் எரிபொருள் இருப்புக்கள், எதிர்வரும் 12 ஆம் திகதி... Read more »