செல்பி புகைப்படத்தால் இளைஞர்கள் இருவருக்கு நேர்ந்த விபரீதம்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் தொலைபேசியில் செல்பி எடுப்பதற்கு முற்பட்டு மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து  (14.08.2022) மாலை இடம் பெற்றுள்ளது. வவுனியாவிலிருந்து திருகோணமலை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இளைஞர்கள் இருவர்... Read more »

தாய்லாந்து அரசிடம் அனுமதி கோரிய கோட்டாபய!

தாய்லாந்தில் தஞ்சம் புகுந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த விகாரைகளுக்கு சென்று வழிபடுவதற்கு அந்த நாட்டின் அரசாங்கத்தின் அனுமதியை கேட்டுள்ளார். எதிர்ப்பு போராட்டத்தை அடுத்து நாட்டிலிருந்து தப்பிச் சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார். அவரின் உயிருக்கு அச்சுறுத்தல்... Read more »

இலங்கை அரசு நம்பிக்கைத் துரோகம்!

சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ள இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ´´இந்தியாவின் அழுத்தத்தைத் தொடர்ந்து சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி மறுத்த இலங்கை அரசு,... Read more »

செல்வ சந்நிதி ஆலயவருடாந்த மகோற்சவ முன்னாயத்த கூட்டம் இடம்பெற்றது!

செல்வச் சந்நிதி ஆலய உற்சவம் ஆரம்பமாகவுள்ள நிலையில் முன்னாயர்த்தக் கூட்டம் 14.08 பருத்தித்துறை பிரதேசஙசெயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. Read more »

ஜனாதிபதியும் எதிர்க் கட்சித் தலைவரும் தனிப்பட்ட கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்- மனோ கணேசன் எம்.பி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவும் முதில் தனிப்பட்ட கலந்துiராடலில் ஈடுபட்டு இருவருக்கும் இடையிலான முரண்பாட்டை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் வலியுறுத்திள்ளார். சர்வகட்சி அரசாங்கத்தில் எதிர்க் கட்சி... Read more »

புலம்பெயர் தமிழர்களின் உதவியை பெறவே தடையை நீக்கியுள்ளோம்: பிரதமர்

புலம்பெயர் தமிழர்களையும் அவர்களது அமைப்புக்களையும் தடைப்பட்டியலில் வைத்துக்கொண்டு, நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அவர்களின் உதவிகளை பெற்று கொள்ள முடியாது. எனவே அவர்களின் உதவிகளை பெற்று கொள்வதற்காக முதற்கட்டமாக சில அமைப்புக்கள் மீதான தடைகளை நீக்கியுள்ளோம் என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர்... Read more »

சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கியது இலங்கை!

கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவி வகித்தபோது தடை செய்யப்பட்ட சில புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் சில தனிநபர்களின் பெயர்கள் தற்போதைய அரசாங்கத்தினால் நீக்கப்பட்டுள்ளன . அதன்படி அவுஸ்திரேலிய தமிழர் பேரவை – உலகத் தமிழர் பேரவை – உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு... Read more »

இருவேறு பிரதேசங்களில் இருவர் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் கைது.

காலி, குருணாகல் ஆகிய மாவட்டங்களின் இருவேறு பிரதேசங்களில் இருவர் வெளிநாட்டு துப்பாக்கிகளுடன் 14.08 கைதுசெய்யப்பட்டுள்ளனர். காலி மிட்டியாகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட துப்பாக்கி, மூன்று தோட்டாக்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கலுப்பே ஹிக்கடுவ... Read more »

பிரித்தானிய பெண்ணுக்கு மைத்திரி ஆதரவுக்குரல்!

காலி முகத்திடல் போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய பெண் கெய்லி பிரேசரின் விசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மகளிர் முன்னணியும் இளைஞர் முன்னணியும் அவரது உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க... Read more »

அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது.

நுவரெலியா பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிபத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் நேற்று 13.08 கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 28, 37, 38 வயதுகளையுடைய மூவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த மூவரும்... Read more »