கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் : நளின் பண்டார

கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார வலியுறுத்தியுள்ளார். தேர்தல் ஒன்றை நடத்துவதைக் காட்டிலும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, அதிகளவான சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளது. தேர்தல் ஒன்று நடந்தால், ஊதியத்தைப் பெறாது கடமையாற்றுவதாக,... Read more »

அரச நிறுவன தலைவர்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை!

அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்துவதற்காக திறைசேரியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அப்பாற்பட்ட செலவுகள் மேற்கொள்ளப்படுமாயின், அதற்கான செலவினங்களை சம்பந்தப்பட்ட பொறுப்பான உத்தியோகத்தர்கள் தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. திறைசேரி செயலாளரினால்... Read more »

அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழு அனுமதி!

ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவருக்கும் நாடாளுமன்ற உயர் பதவிகளுக்கான குழுவின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இதன்படி, இந்தோனேசியாவின் இலங்கைக்கான புதிய தூதுவராக அத்மிரால் ஜயனாத் கொலம்பகே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் விவசாய, வனவிலங்கு, வனஜீவராசிகள், தேசிய கொள்கைகள், சுகாதாரம், தொழில் மற்றும் வெளிநாட்டு... Read more »

அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை டீசல் மீட்பு: சந்தேகநபர் ஒருவர் கைது.

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை டீசல் மீட்கப்பட்டுள்ளது.   குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பின் போது குறித்த டீசல் தொகை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 10 கொள்கலன்களில் இருந்து ஆயிரத்து 600 லீற்றர் இவ்வாறு... Read more »

நல்லூரில் உள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயம்!

நல்லூரில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை விசாரணைகளை முன்னெடுத்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் இன்று பிற்பகல் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லூர் விநாயகர்... Read more »

பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான தைமூர் கப்பல் நாட்டை விட்டு வெளியேறியது!

ஒன்றிணைந்த கடற்படை ஒத்திகையின் பின்னர், பாகிஸ்தான் கடற்படைக்கு சொந்தமான தைமூர் கப்பல் இன்று நாட்டை விட்டு வெளியேறியது. குறித்த கப்பல் கடந்த 12 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த கப்பல் இலங்கை கடற்படையின் சிதுரல கப்பலுடன் மேற்கு கடலில் ஒத்திகை நடவடிக்கைகளில்... Read more »

சிறைச்சாலை அதிகாரி சுட்டுக்கொலை: சந்தேகநபர் ஒருவர் கைது!

அம்பலாங்கொடை பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 51 வயதான குறித்த சந்தேகநபர் துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் தப்பி சென்று டுபாயில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்தநிலையில் அவர் மீள நாடு திரும்பியமை... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் வீட்டின் பின் பக்கம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக அடையாளம் காணப்பட்டவர் தம்பையா கந்தசாமி 65வயது நிரம்பியவர் எனவும் 05பிள்ளைகளின் தந்தையும் ஆவார். பளை இத்தாவில் பகுதியில் தனது மகளுடன்... Read more »

நெருக்கடியை வெற்றி கொள்ள இலங்கை தலைவர்களிடம் அர்ப்பணிப்பு தேவை – பொதுநலவாய செயலாளர்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க உதவும் வகையில் இந்தியா அளித்துள்ள தாராளமான மற்றும் பன்முக உதவிகள் மகிழ்ச்சி அளிப்பதாக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரீசியா ஸ்கொட்லாண்ட் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு பயணம் செய்துள்ள அவர், பிடிஐக்கு அளித்த சிறப்பு செவ்வியில், உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்த்துப்... Read more »

மட்டக்களப்பில் கராத்தே போட்டியில் இருபத்து ஆறு பதக்கங்களை சுவீகரித்து சாதனை

மட்டக்களப்பு மாவட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் 26 பதக்கங்களைப்பெற்று மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின் கராத்தே அணியின் தலைவர் ஆர்.கௌசீகன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கராத்தே கழகங்களுக்கு இடையிலான போட்டி நடைபெற்ற நிலையில் அதில் பங்குபற்றிய வீரர்களை... Read more »