கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து 205 மில்லியன் ரூபாய் பெறுமதியான 9 கிலோ 500 கிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்டுகளுடன் வெளியேற முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விமானப் பயணி மற்றும் விமான நிலையத்தின் சுங்க வரியற்ற வர்த்தக வளாகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரை சுங்க... Read more »
இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும், 5... Read more »
இந்திய பெருங்கடலில்இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க வேண்டும். எனினும் பிராந்தியத்தில் ஏகபோக உரிமை கோர முடியாது என்று வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள சீன கப்பல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில்... Read more »
பொதுபலசேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஆணைக்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் மிக முக்கியமான பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியிருப்பதாக அரசாங்கம்... Read more »
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் உயிரை மாய்க்க தவறான முடிவெடுத்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தின் துறையொன்றின் தலைவராக இருந்த பேராசியர் தனது மேல் படிப்பிற்காக வெளிநாடு செல்ல அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவரது துறைத்தலைவர்... Read more »
அஜர்பைஜானில் இலங்கையர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 12ம் திகதி இரவு 10:00 மணியளவில் அஜர்பைஜானின் புசுலியில் உள்ள போயுக் பெஹ்மென்லி கிராமத்திற்கு அருகிலுள்ள எல்லையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த அனைவரும் கைது... Read more »
மாணவர் விசா தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாணவர் விசாக்களுக்கு முன்னுரிமை மற்றும் உயர் முன்னுரிமை விசாக்கள் கிடைப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. இதன்படி, அடுத்த சில வாரங்களில் அதிக தேவையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்,... Read more »
கொழும்பில் பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்படும் என அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடகங்களிடம் இந்த விடயத்தை அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கூறியுள்ளது. பொது மக்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கோரி போராட்டங்களை... Read more »
மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் தமிழ் அரசியல் வாதிகள் கண்டுகொள்ளவில்லை என வடமராட்சி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவரும் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சாமசங்களின் சம்மேளன உப தலைவருமான நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வடமராட்சியில் நேற்று (16.08.2022) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து... Read more »
கல்விச் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கிளிநாச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன், கிளிநொச்சி... Read more »