நெல் செய்கையாளர்களுக்கு கமநலசேவை திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு..!

யாழ்.மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் டீசலை பெறாதவர்கள் உடனடியாக அதனை பெற்றுக் கொள்ளும்படி மாவட்ட உதவி கமநல ஆணையாளர் எஸ்.நிஷாந்தன் அறிவித்தல் விடுத்திருக்கின்றார்.  யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்படி அறிவிப்பை விடுத்திருக்கின்றார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மாவட்டத்தில்... Read more »

யாழ்.மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கைக்கு தேவையான 4000 மூடை யூரியா.

யாழ்.மாவட்ட பெரும்போக நெற் செய்கைக்கு தேவையான சுமார் 200 மெற்ரிக் தொன் யூரியா நேற்று முன் தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்தடைந்தது. ஒவ்வொன்றும் 50 கிலோ எடை கொண்ட 4000 மூடைகள் யாழ் கோண்டாவில் உள்ள விவசாய உரக் களஞ்சிய சாலையை வந்தடைந்தது. வரவேற்குப் நிகழ்வில்... Read more »

நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த பூசகர் தொடர்பில் திடுக்கிடும் தகவல்…!

நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில் உயிரிழந்த பூசகர் ஊசி மூலம் ஹெரோயின் போதைப் பொருளை எடுத்துக் கொண்ட நிலையில் உயிரிழந்துள்ளார். 34 வயதுடைய பூசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை திருநெல்வேலியில் உள்ள நண்பர் வீடொன்றுக்குச் சென்ற அவர் திடீரென மயங்கி விழுந்து... Read more »

வீட்டை விட்டு சென்ற சிறுமிகள் துஸ்பிரயோகம், சாதுர்யமாக செயற்பட்ட சிறுமி, ஐவர் கைது…..!

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்திருந்த இரு சிறுமிகளை கடத்தியமை மற்றும் பாலியல் உறவில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட 5 சந்தேகநபர்களையும் துர்நடத்தையில் ஈடுபட்ட இரு சிறுமிகளையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் இடம்பெற்ற... Read more »

வடக்கில் நான்கு அதிகாரிகளுக்கு உள்ளக இடமாற்றம்…..!

வடக்கு மாகாண அமைச்சுகளில் கடமையாக்கிய நான்கு அதிகாரிகளுக்கு வடமாகாண பிரதம செயலாளரின் சிபாரிசின் அடிப்படையில் உள்ளக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காலமும் வடக்கு உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் பதில் உள்ளூராட்சி  அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த பற்றிக் நிரஞ்சன் வடக்கு கல்வி அமைச்சின் சிரேஷ்ட... Read more »

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை நம்பி ஏமாந்துவிட்டோம்: தம்பிராசா செல்வராணி.

காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தை மழுங்கடிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஊக்குவிக்கபடுகின்றனர். இதில் அவர்களுக்கு இலாபம் உண்டு என அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று(17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு... Read more »

மன்னாரில் தீக்கிரையாக்கப்பட்டுள்ள மீன் வாடிகள்.

மன்னார் – பேசாலை காட்டாஸ்பத்திரி பகுதியில் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்ட மீன் வாடிகள் விஷமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது 3 வாடிகள், 25 குதிரை வலு கொண்ட 3 மீன்பிடி இயந்திரங்கள், பெறுமதிமிக்க நண்டு, சூடை, கிளைக்கன் மீன்... Read more »

தாய்லாந்தில் 17 இடங்களில் குண்டு வெடிப்பு:15 பேர் பலி.

தாய்லாந்தின் தென் பகுதியில் 17 இடங்களில் இன்று நடந்த குண்டு வெடிப்புகள் மற்றும் தீவைப்புச் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதுடன் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அதிகாலையில் நடந்துள்ளதாக தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட்டணி,நாராதிவத், யால ஆகிய தாய்லாந்தின் தென் பகுதிகளில் இந்த... Read more »

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்த இலங்கை நடிகை.

இந்திய தொழிலதிபரை மிரட்டி 200 கோடி பறித்தமை தொடர்பில் இலங்கை நடிகை ஜாக்குலின் பெர்நாண்டஸ் குற்றவாளியாக பெயரிடப்பட்டார். மருந்து நிறுவனர் மற்றும் தொழிலதிபர் மனைவியை மிரட்டி 200 கோடி ரூபாய் (இந்தியன் நாணய பெறுமதிபடி) பறித்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்பவரை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள்... Read more »

வேலை வாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு.

வேலை வாய்ப்பிற்காக அவசரமாக வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கு கடவுச்சீட்டை வழங்குவதற்காக திங்கட்கிழமை (22) முதல் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் விசேட கமருபீடம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. கடவுசீட்டை பெறுவதற்காக தற்போது அதிகளவான மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான புதிய கடவுச்சீட்டை பெறுவதற்கு... Read more »