மாணவர்கள் மீது கொடூரமாக தாக்கிய அதிபர்

களுத்துறை மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய மில்லனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு... Read more »

வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு இரு குழுக்களுக்கிடையே மோதல் 50 பேர் தப்பி ஓட்டம் பொலிசர் உட்பட 10 பேர் காயம்

வெலிகந்தை கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே  நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) ஏற்பட்ட மோதலையடுத்து 50 மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளதுடன் பொலிசார்  இராணுவத்தினர் உட்பட 10 பேர் படுகாயமடைந்த நிலையில் வெலிகந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் தப்பி ஓடிய 35 பேர் சரணடைந்துள்ளதாகவும்... Read more »

அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க திட்டம்

எதிர்வரும் 15 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான நிறுவன வரிகள் மற்றும் சுங்க வரிகளை உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவன வரி அதிகரிப்பு சதவீதம் குறித்து நிதி அமைச்சக அதிகாரிகள் தற்போது கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் அதிவேக நெடுஞ்சாலையில் வசூலிக்கப்படும்... Read more »

நல்லிணக்க முயற்சிகளை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன நல்லிணக்கத்திற்கான பன்முனை வேலைத்திட்டத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை ஒன்றிணைக்க நாடாளுமன்றக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதில்  பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... Read more »

இலங்கையில் மீண்டும் முகக் கவச பயன்பாடு – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான நிபுணர் ஜூட் ஜயமஹா பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் பெறப்பட்ட கணிசமான எண்ணிக்கையிலான சளி மாதிரிகள் இன்புளுவன்சா... Read more »

வாகரையில் கஞ்சா, ஜஸ் போதைப் பொருள். பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

மட்டக்களப்பு வாரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை கஞ்சா மற்றும் ஜஸ் போதை பொருளுடன் நேற்று சனிக்கிழமை (5) இரவு பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட பொலிஸ் காஸ்டபில் போதை பொருள் பாவனையில்... Read more »

மட்டு கல்குடாவில் திருட்டில் திடர்திருட்டு. சுள்ளான் திருட்டுக் கும்பல் தலைவர், 6 பேர் கைது.

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்ததுடன் திருடப்பட்ட  ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2,  தங்க... Read more »

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த பல்கலை மாணவி – இறுதிக்கிரியைகள் இன்று

வவுனியா பேருந்து விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலை மாணவி ராமகிருஸ்ணன் சயகரியின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக நாவலப்பிட்டி நகரிலுள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் நேற்று (05) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 23 வயதான ராமகிருஸ்ணன் சயகரி உயிரிழந்திருந்தார்.... Read more »

அரசியலமைப்பு சபைக்கு உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை

இலங்கையின் நாடாளுமன்றில் புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 21வது திருத்தத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்புச் சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை கூடுகின்றனர். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது இந்த... Read more »

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை மீ்ண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(6) நள்ளிரவு முதல் இந்த விலை அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என்று லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி, 12.5 கிலோ கிராம் எடையுடை எரிவாயு கொள்கலனின் விலை 200 முதல் 250 ரூபாவுக்கு இடைப்பட்ட ஒரு தொகையினால் ... Read more »