போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு

போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் போட்டி நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் போதைப் பொருளற்ற சமூகத்தை உருவாக்கும் கவனயீர்ப்பு நிகழ்வு எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறவுள்ளது.... Read more »

யாழில் இரண்டு மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

சுவாசக் குழாயின் மேற்பகுதியில் கிருமித் தொற்றாகி சளி கட்டியானமையால் மூச்சடைத்து இரண்டு மாத ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் நேற்றைய தினம் (02.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். கல்வியங்காட்டைச் சேர்ந்த உமாரமணன் கேதுசன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. இந்நிலையில், குழந்தைக்குத்... Read more »

பேருந்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

இரண்டு தடவைகள் டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டதன் காரணமாக பேருந்து கட்டணத்தில் குறைக்கப்படக்கூடிய தொகை தற்போது கணக்கிடப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார். நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப... Read more »

மயங்கி வீழ்ந்த பல்கலை மாணவன் திடீர் மரணம்!

கஹதுட்டுவ-தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழக விடுதியில் மயங்கி விழுந்த மாணவன் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மாணவன் தனது அறையில் மயங்கி வீழ்ந்து ஹோமாகம வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி ​​அவர் உயிரிழந்துள்ளார். தியகம தொழில்நுட்ப டிப்ளோமா பல்கலைக்கழகத்தில்... Read more »

இந்தியால் கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைது

இந்தியாவில் கைது செய்யப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஸாரான் ஹசீமுடன் தொடர்புடையவர்களான ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன்  தொடர்பில்  இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவவரை நேற்று திங்கட்கிழமை (02) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர்... Read more »

யாழில் சடுதியாக அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு மாத்திரம் 742 பேர் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலையில் நடத்தப்பட்ட சிகிச்சைகளில் இந்த விடையம் தெரியவந்துள்ளது. இதேவேளை இவர்களில் 20 தொடக்கம் 25 வயதுக்கு உட்பட்டவர்களே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஐஸ் மற்றும்... Read more »

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி!

கட்டுவன – ஊருபொக்க வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். நேற்று அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் உயிரிழந்த தந்தை 66 வயதானவர் என்றும்... Read more »

மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் கைது!

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்கு தயார்படுத்தப்பட்ட போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி மற்றும் சேதவத்தை ஆகிய பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடமிருந்த 80 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் விசேட... Read more »

அரச உத்தியோகத்தர்களுக்கு விசேட கொடுப்பனவு!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் சுற்றறிக்கையின் பிரகாரம், அரச உத்தியோகத்தர்களுக்கான 4,000 ரூபா விசேட முற்கொடுப்பனவு வழங்கப்பட்டு வரும் நிலையில், பெப்ரவரி இறுதி வரை அந்தக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது. 2023... Read more »

நாளை முதல் யாழில் இருந்து கொழும்புக்கு மேலதிகமாக 33 பேரூந்துகள் சேவையில்!

யாழ்ப்பாணம் கொழும்பு பேருந்து சபையில் மேலதிகமாக 33 பேருந்துகள் சேவையில் ஈடுபட உள்ளதாக வட மாகாண வீதி  பயணிகள்போக்குவரத்து  அதிகார சபையின் தலைவர் ரவீந்திரன் தெரிவித்தார் என்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார், கொழும்பு யாழ்ப்பாணத்துக்கான... Read more »