இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுப்பெற்றது!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதன்படி இன்றைய தினம் (01) டொலரின் கொள்வனவு விலை 283.87 ரூபாவாகவும் விற்பனை விலை 297.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. Read more »

மட்டக்களப்பு ஆரையம்பதி இலங்கை வங்கியை உடைத்து கொள்ளையிட முயற்சி கொள்ளையன் தப்பி ஓட்டம்

பூட்டப்பட்டிருந்த இலைங்கை வங்கி கதவை உடைத்து உட்புகுந்து கொள்ளையிட முயற்சிதபோது  வங்கி அவசர சத்த ஒலியையடுத்து  பொதுமக்கள் கொள்ளைகாரனை பிடிக்க முற்பட்டபோது கொள்ளைகாரன் தப்பி ஓடிய சம்பம் இன்று வியாழக்கிழமை (01) அதிகாலையில் மட்டக்களப்பு ஆரையம்பதி இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். குறித்த வங்கியை... Read more »

பூநகரி கௌதாரி முனை பகுதியில் மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்ட விவகாரம் – மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம்

பூநகரி கௌதாரி முனை பகுதியில் மண்ணகழ்வு மேற்கொள்ளப்பட்ட விவகாரம் தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் விவாதம் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இவ்வாறு மக்கள் பிரதிநிதிகளிற்கிடையில் விவாதிக்கப்பட்டது. பூநகரி பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தி்ற்கு அனுமதியளிப்பது தொடர்பிலான விடயம்... Read more »

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்….!

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி பேருந்து நிலையம் முன்பாக இடம்பெற்றது. பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளிற்கு சென்று சிக்குண்டுள்ள பெண்களை மீட்டு நாட்டுக்கு அழைத்து... Read more »

ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும் இதுவரை இல்லை……! அன்னலிங்கம் அன்ராசா

ஜனாதிபதியை சந்திப்பதற்காக மூன்று தடவை மகஜர் அனுப்பியும் எந்தவித அழைப்பும்  இதுவரை இல்லை என வடமாகாண கடற்றொழிலாளர் சமாசங்களின் பிரதிநிதி  அன்னலிங்கம் அன்ராசா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே எவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர்... Read more »

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்…!

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பம் ஏற்று ஆரம்புக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பல்வேறு தடைகளையும்  தாண்டி விகாரைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தையிட்டயில் விகாரை தனியார் காணிகளில் சட்டவிரோதமாக  கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே... Read more »

யாழில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீற்றர் பொருத்துவது அவசியம்! ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானம்.!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டணமீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது குறிப்பாக கட்டண... Read more »

யாழில் கசிப்பு அருந்திய இளைஞன் இரத்த வாந்தி எடுத்து மரணம்..!

யாழ்ப்பாணத்தில் கசிப்பு அருந்திய இளைஞர் ஒருவர் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,நிறை போதையில் இருந்த இளைஞர் திடீரென இரத்த வாந்தி எடுத்துள்ளார். அவரை உறவினர்கள் வைத்தியசாலையில் சேர்த்த நிலையில், அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர்... Read more »

ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு யாழ்.ஊடக அமையத்தில்..!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவு தினம் 31.05.2023 புதன்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. ஊடகவியலாளர் ஜயாத்துரை நடேசன் கடந்த 2004ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி மட்டக்களப்பில் உள்ள தனது வீட்டில் இருந்து அலுவலகம் நோக்கி... Read more »

யாழ்.குடாநாட்டுக்கான குடிநீர் திட்டம்! சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு நியமனம்… |

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவருவதற்காக திட்டம் தொடர்பாக ஆராய்ந்து சிபார்சு வழங்குவதற்காக வடமாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் 31.05.2023  புதன்கிழமை இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் வடமாகாணசபை அவைத் தலைவர் முன்வைத்த பிரேரணை... Read more »