இம்முறை கச்சதீவு அந்தோனியார் ஆலய உற்சவத்திற்கு இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 100 பேருக்கு மட்டுமே அனுமதி!

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற புனித கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா இடர் நிலை காரணமாக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 100 பக்தர்களை மட்டும் ஆலய உற்சவத்தில் பங்கேற்க அனுமதிப்பது என... Read more »

உக்ரைன் விவகாரம் தொடர்பில் ஐ.நா பொதுச்செயலாளர் கவலை.

உக்ரைன் எல்லையில் ரஷ்ய துருப்புக்கள் குவிவதால் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருப்பதாக ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஒரு சிறிய தவறு அல்லது தவறான தகவல் தொடர்பு... Read more »

ஆஸ்திரேலிய போர் விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சிய சீன கடற்படை கப்பல்

சீன கடற்படைக் கப்பல் ஒன்று, ஆஸ்திரேலிய போர் கப்பல் ஒன்றின் மீது “ராணுவத்தில் பயன்படுத்தப்படும் தரத்திலான” லேசர் ஒளியை கொண்டு பாய்ச்சியதாக ஆஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டுகிறது. வடக்கு ஆஸ்திரேலியாவின் அரஃபுரா கடலில் கடந்த வியாழனன்று ​​சீன கப்பல் சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம்... Read more »

யுக்ரேன் – ரஷ்யா பதற்றம்: ஒரே நாளில் 1,400 வெடிப்புச் சம்பவங்கள்.

யுக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம் என யுக்ரேனிய அதிபர் தெரிவித்திருக்கிறார். ஆனால் ரஷ்யப் படையெடுப்புக்கு எதிராக... Read more »

கமலா ஹாரிஸ் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை.

ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுப்பதற்கு ஒரு போலி காரணத்தை உருவாக்க ரஷ்யா முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டினார். ரஷ்ய படையெடுப்பு நடந்தால் அதற்கான விளைவுகள் “கடுமையானதாகவும் விரைவானதாகவும்” இருக்கும் என்று எச்சரித்தார் கமலா... Read more »

புங்குடுதீவு இறுப்பிட்டி கேரதீவு ஊடான போக்குவரத்து சேவை 35 வருடங்களின் பின் ஆரம்பம்!

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை ஒன்று இன்றையதினம் இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது. வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்கள் ஈழ மக்கள்... Read more »

வட்டுக்கோட்டையில் உதவி செய்வது போல நடித்து வயோதிப பெண்ணிடம் சங்கிலி திருடிய பெண் கைது!

உதவி செய்வது போன்று பாசாங்கு செய்து வயோதிப பெண்ணிடம் இருந்து தங்க சங்கிலியை அபகரித்து சென்ற இளம் பெண்ணொருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, அராலி வைத்திய சாலைக்கு சிகிச்சைக்கு சென்று , வீடு... Read more »

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிசாரினால் கைது!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. அதனடிப்படையில் சாவகச்சேரி நகரில் யாசகம் பெற்றவர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.... Read more »

அளம்பிலில் யாழ்ப்பாண இளைஞர்கள் 12 பேர் கைது!

யாழ்பாணத்தில் இருந்து அளம்பில் சென்றவர்களுக்கும் அளம்பில் பிரதேசத்தினை சேர்ந்தவர்களுக்கும் நேற்று 20 மாலை இடம்பெற்ற முரண்பாட்டை தொடர்ந்து அது கைகலப்பாக மாறியுள்ளது. தாக்குதலின் போது யாழில் இருந்து சென்ற இருவரும்,  அளம்பில் பகுதியினை சேர்ந்த 18, 37, 45 அகவைக்கு உட்பட்ட மூவரும் என... Read more »

யாழில் வீடொன்றுக்குள் புகுந்து மோட்டார் சைக்கிள் திருடியவர் கைது!

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்த... Read more »