யாழ்ப்பாணம் – கண்டி வீதி ஆகியவற்றின் புனரமைப்பில் பாரிய மோசடியாம்! |

வடமாகாணத்திற்கான புகைரத பாதை மற்றும் யாழ்ப்பாணம் – கண்டி வீதி புனரமைப்பு பணிகளின்போது சுமார் 4 மடங்கு அதிக பணம் செலவிடப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தான் அப்போதைய அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவிடம் சுட்டிக்காட்டி, இதில் மிகப்பெரிய மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த போதிலும் அவர் அதனைக் கண்டுகொள்ளவில்லை எனவும்,

வேறு வழியின்றி தான் அரசாங்கத்திலிருந்து வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,

இந்தியாவின் இல்கோன் என்ற நிறுவனமே வடக்கிற்கான புகையிரத பாதையை அமைத்திருந்தது. அவர்கள் இந்த திட்டத்தை நாம் கூறிய விலையை விட 4 மடங்கு அதிகமான விலையில் தான் மேற்கொண்டனர். நாம் இதை செய்திருந்தால் 4 இல் ஒரு பங்கில் செய்திருக்கலாம்.

Recommended For You

About the Author: admin